Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதுதான்டா உலகக் கோப்பை ஆட்டம்.... பெனால்டியில் 4-3 என ரஷ்யாவை வென்றது... அரை இறுதியில் குரேஷியா!

சோச்சி: இதுதான் உலகக் கோப்பையில் மிகவும் பரபரப்பான ஆட்டம் என்று சொல்லும் அளவுக்கு ரஷ்யாவும், குரேஷியாவும் மாறி மாறி கோலடிக்க, 2-2 என ஆட்டம் சமநிலையில் முடிந்தது. அதையடுத்து பெனால்டி ஷூட்அவுட்டில் 4-3 என ரஷ்யாவை வென்று அரை இறுதிக்கு நுழைந்தது குரேஷியா.

1
958080

21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. கடந்த மாதம் 14ம் தேதி துவங்கி, 28ம் தேதி வரை முதல் சுற்று லீக் ஆட்டங்கள் நடந்தன. அதைத் தொடர்ந்து ஜூன் 30 முதல் ஜூலை 3ம் தேதி வரை நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் நடந்தன.

இந்த உலகக் கோப்பையில் 7 முன்னாள் சாம்பியன்கள் என மொத்தம் 32 நாடுகள் களமிறங்கின. காலிறுதி சுற்றை 8 அணிகள் எட்டின.

உருகுவே, பிரான்ஸ், பிரேசில், பெல்ஜியம், ரஷ்யா, குரேஷியா, ஸ்வீடன், இங்கிலாந்து ஆகியவை காலிறுதியில் விளையாடின. நேற்று நடந்த ஆட்டங்களில் பிரான்ஸ் 2-0 என உருகுவேயை வென்று முதல் அணியாக அரை இறுதிக்கு முன்னேறியது. மற்றொரு ஆட்டத்தில் பெல்ஜியம் 2-1 என பிரேசிலை வென்றது. இன்று நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து 2-0 என ஸ்வீடனை வென்றது. மற்றொரு காலிறுதியில் குரேஷியா பெனால்டி ஷூட்அவுட்டில் 4-3 என ரஷ்யாவை வென்றது

ரஷ்யா கடந்த வந்த பாதை

ரஷ்யா கடந்த வந்த பாதை

இந்த உலகக் கோப்பையில் ஏ பிரிவில் இடம்பெற்றிருந்த ரஷ்யா லீக் சுற்றில் 3ல் இரண்டு ஆட்டங்களில் வெற்றி, ஒரு தோல்வியை சந்தித்தது. முதல் ஆட்டத்தில் சவுதி அரேபியாவை 5-0 என வென்று அசத்தியது. அடுத்தது சலாவின் எகிப்தை 3-1 என்று வென்றது. உருகுவேயிடம் 3-0 என தோல்வியடைந்தது. நாக் அவுட் சுற்றில் முன்னாள் சாம்பியனான ஸ்பெயினை 4-3 என பெனால்டி ஷூட்அவுட்டில் வென்றது. தனிநாடானப் பிறகு நான்காவது முறையாக உலகக் கோப்பையில் விளையாடும் ரஷ்யா, முதல் முறையாக காலிறுதியில் விளையாடுகிறது.

குரேஷியா கடந்து வந்த பாதை

குரேஷியா கடந்து வந்த பாதை

இந்த உலகக் கோப்பையில் டி பிரிவில் இடம்பெற்றிருந்த குரேஷியா மூன்று ஆட்டங்களிலும் வென்றது. நைஜீரியாவை 2-0, அர்ஜென்டினாவை 3-0, ஐஸ்லாந்தை 2-1 என வென்றது. நாக் அவுட்டில் டென்மார்க்கை 3-2 என பெனால்டி ஷூட்அவுட்டில் வென்றது. நான்காவது முறையாக உலகக் கோப்பையில் விளையாடும் குரேஷியா, 2வது முறையாக அரை இறுதிக்குள் நுழையும் வாய்ப்பை எதிர்நோக்கியுள்ளது,

சூப்பர் ஆட்டம்

சூப்பர் ஆட்டம்

இன்று நடந்த கடைசி காலிறுதி ஆட்டத்தில் ரஷ்யாவும், குரேஷியாவும் மோதின. இதில் 64 சதவீத நேரம் பந்து குரேஷியாவிடம் இருந்தது. துவக்கத்தில் இருந்தே அந்த அணி மிரட்டலாக விளையாடியது. 31வது நிமிடத்தில் ரஷ்யாவின் செர்ரிஷேவ் சூப்பர் கோல் அடித்தார். இந்த உலகக் கோப்பையில் அவர் அடிக்கும் நான்காவது கோல் இது. அதையடுத்து ரஷ்யா 1-0 என முன்னிலை பெற்றது. 39வது நிமிடத்தில் குரேஷியாவின் கிராமாரிக் கோலடித்து 1-1 என சமநிலையை உருவாக்கினார்.

குரேஷியா மிரட்டல் வெற்றி

குரேஷியா மிரட்டல் வெற்றி

ஆட்டம் 1-1 என முடிந்ததால், கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. 100வது நிமிடத்தில் விடா கோலடிக்க குரேஷியா 2-1 என முன்னிலை பெற்றது. 115 நிமிடத்தில் மரியோ பெர்னான்டஸ் கோலடிக்க 2-2 என மீண்டும் சமநிலை உருவானது. ஆட்டம் 2-2 என முடிந்ததால், பெனால்டி ஷூட்அவுட் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் குரேஷியாவின் புரோஜோவிக், மோட்ரிக், விடா, ராகிடிக் ஆகியோர் கோலடித்தனர். கோவாசிக் கோலடிக்கத் தவறினார். ரஷ்யாவின் ட்ஜாகோவா, இக்னாஷிவிச், குஸ்யேவ் கோலடிக்க, ஸ்மோலோவ், பெர்னான்டஸ் கோலடிக்கத் தவறினர். அதையடுத்து 4-3 என வென்று குரேஷியா அரை இறுதிக்கு முன்னேறியது.

Story first published: Sunday, July 8, 2018, 2:35 [IST]
Other articles published on Jul 8, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+