Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரஷ்யாவுக்கு வெயிட்டை காட்டியது உருகுவே.. 3-0 என மிரட்டல் வெற்றி!

சமாரா: 21வது ஃபிபா உலகக் கோப்பையில் ரஷ்யாவுக்கு எதிரான ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான உருகுவே 3-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது.

21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. போட்டியில் பங்கேற்கும் 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற மூன்று அணிகளுடன் விளையாடும்.

அதன்படி ஒவ்வொரு அணியும் இரண்டு ஆட்டங்களை முடித்துள்ளன. ஏ பிரிவில் இருந்து ரஷ்யா, உருகுவே, சி பிரிவில் இருந்து பிரான்ஸ், டி பிரிவில் இருந்து குரேஷியா, எப் பிரிவில் இருந்து மெக்சிகோ, ஜி பிரிவில் இருந்து பெல்ஜியம், இங்கிலாந்து ஆகியவை ஏற்கனவே அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

பிரிவு சுற்றில் மூன்றாவது ஆட்டங்கள் இன்று துவங்கின. இதில் ஏ பிரிவில் இருந்து நாக் அவுட் சுற்றுக்கு ஏற்கனவே முன்னேறியுள்ள ரஷ்யா மற்றும் உருகுவே மோதின.

ரஷ்யா அசத்தல்

ரஷ்யா அசத்தல்

ஏ பிரிவில் நடந்த முதல் லீக் ஆட்டத்தில் சவுதி அரேபியாவை 5-0 என்ற கோல் கணக்கில் ரஷ்யா வென்றது. இரண்டாவது ஆட்டத்தில் மொகம்மது சலாவின் எகிப்தை 1 - 0 என்ற கோல் கணக்கில் உருகுவே வென்றது.

எகிப்தை வென்றது ரஷ்யா

எகிப்தை வென்றது ரஷ்யா

அதற்கடுத்த ஆட்டத்தில் ரஷ்யா 3-1 என எகிப்தை வென்றது. அடுத்து நடந்த சவுதி அரேபியாவுக்கு எதிரான ஆட்டத்தின்போது, தனது 100வது ஆட்டத்தில் பங்கேற்ற லூயிஸ் சுவாரஸ் கோலடிக்க 1-0 என உருகுவே வென்றது.

முன்னேறிய அணிகள்

முன்னேறிய அணிகள்

இதன் மூலம் தலா 2 வெற்றிகளைப் பெற்ற ரஷ்யா மற்றும் உருகுவே நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின. அதே நேரத்தில் இரண்டு ஆட்டங்களிலும் தோல்வியடைந்த எகிப்து மற்றும் சவுதி அரேபியா பிரிவு சுற்றிலேயே வெளியேறின.

டாப்பில் எந்த அணி

டாப்பில் எந்த அணி

இந்த நிலையில் ஏ பிரிவில் இன்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் ரஷ்யா, உருகுவே மோதின. இதில் 10வது நிமிடத்தில் சுவாரஸ் கோலடிக்க உருகுவே 1-0 என முன்னிலை பெற்றது. 23வது நிமிடத்தில் ரஷ்யாவின் செர்ரிஷேவ் சேம் சைடு கோலடிக்க உருகுவே 2-0 என முன்னேறியது. ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் கவானி கோலடிக்க 3-0 என உருகுவே வென்றது. இதன் மூலம் ஏ பிரிவில் உருகுவே முதலிடத்தைப் பிடித்தது.

Story first published: Tuesday, June 26, 2018, 9:18 [IST]
Other articles published on Jun 26, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+