ஃபிபா உலகக் கோப்பை.... முதல் ஆட்டத்தில் ரஷ்யா அபாரம்.... 5 கோல்கள் அடித்து வெற்றி!
சென்னை: 21வது ஃபிபா உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் சவுதி அரேபியாவை 5-0 என்ற கோல் கணக்கில் ரஷ்யா அபாரமாக வென்றது.
21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது.

இந்த உலகக் கோப்பைக்கான போட்டி இன்று துவங்கியது. முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ரஷ்யாவும், சவுதி அரேபியாவும் மோதின. இதில் ரஷ்யா 5-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
----
பிரிவு ஏ
ரஷ்யா - சவுதி அரேபியா
5 - 0
----
ஃபிபா உலகக் கோப்பை வரலாற்றிலேயே, உலகத் தரவரிசையில் மிகவும் குறைந்த நிலையில் இருக்கும் இரண்டு அணிகள் மோதுவது இதுவே முதல் முறையாகும். குறிப்பாக போட்டியை நடத்தும் ரஷ்யா, தரவரிசையில் 70வது இடத்தில் உள்ளது. சவுதி அரேபியா 67வது இடத்தில் உள்ளது.
-----
ஃபிபா உலகக் கோப்பை போட்டியின் முதல் ஆட்டமே அசத்தலாக அமைந்தது. இந்த ஆட்டத்தில் ரஷ்யா வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு ஓரளவுக்கு இருக்கிறது என்று நினைக்கப்பட்டது.
ஆனால், ஆட்டத்தின் துவக்கத்தில் இருந்து முடியும் வரை மைதானத்தில் இருந்தவர்களை, ரஷ்ய வீரர்கள் சீட்டின் நுனியில் உட்கார வைத்து விட்டனர். 12வது நிமிடத்தில் காசின்கீ இந்த உலகக் கோப்பையின் முதல் கோலை அடித்தார்.
43வது நிமிடத்தில் செர்ரிஷேவ் கோலடிக்க முதல் பாதியில் 2-0 என்ற முன்னிலையில் ரஷ்யா இருந்தது. அதன்பிறகு டிசூபா 71வது நிமிடத்தில் கோலடிக்க, அட அசத்தறாங்கப்பா என்று கூற வைத்தது.
ஆட்டம் முடிவதற்கு கடைசி நிமிடம் இருக்கையில் செர்ரிஷேவ் மற்றொரு கோலை அடித்தார். சில விநாடிகளே இருந்த நிலையில் கோலோவின் அணியின் 5வது கோலை அடித்தார்.
இறுதியில் 5-0 என்ற கோல் கணக்கில் ரஷ்யா அபாரமாக வென்றது. இந்த உலகக் கோப்பையின் முதல் கோல், முதல் வெற்றியைப் பெற்றது. இதன் மூலம் ஏ பிரிவில் 3 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.


Click it and Unblock the Notifications