Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

SAFF கோப்பை கால்பந்து - பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா.. கேப்டன் சுனில் செத்ரி ஹாட்ரிக் கோல்

பெங்களூரு : 14வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, பாகிஸ்தானை பந்தாடியது. பெங்களூருவில் இன்று தொடங்கிய இந்த தொடர் ஜூலை 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், குவைத், வங்கதேசம், மாலத்தீவ் ,லெபனான், பூடான் ஆகிய 8 அணிகள் பங்கேற்கிறது. கிரிக்கெட்டில் மட்டும் தான் பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கு வருவது இல்லை. அனுமதிக்கப்படுவதும் இல்லை.

 SAFF Football - India thrashed Pakistan 4-0 as sunil chetri scored hattrick

ஆனால்,கிரிக்கெட்டை தவிர ஹாக்கி, கால்பந்து போன்ற விளையாட்டில் எல்லாம் பாகிஸ்தான் இங்கு விளையாடி கொண்டு தான் செல்கிறது. கிரிக்கெட் ரசிகர்கள் அப்படி என்ன பாவம் செய்தார்கள் என்று தெரியவில்லை. சரி விசயத்திற்கு வருவோம்.

பெங்களூருவில் நடைபெற்ற குரூப் ஏ லீக் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதியது. இந்தப் போட்டி தொடகுவதற்கு 5 மணி நேரத்திற்கு முன்பு தான் பாகிஸ்தான் அணி இந்தியா வந்தடைந்தது. இந்தப் போட்டியை 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் கண்டு களித்தனர்.

 SAFF Football - India thrashed Pakistan 4-0 as sunil chetri scored hattrick

போட்டி தொடங்கியதில் இருந்தே இந்திய வீரர்களின் ஆதிக்கம் தான் போட்டியில் இருந்தது. ஆட்டத்தின் 10வது நிமிடத்திலேயே இந்திய வீரர் சுனில் செற்றி, முதல் கோலை அடிக்க, 16வது நிமிடத்தில் இந்தியாவுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை, சுனில் செற்றி மீண்டும் கோலாக மாற்றினார்.

இதே போன்று ஆட்டத்தின் 2வது பாதியில் 74வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி சுனில் செற்றி கோலாக மாற்றி, ஹாட்ரிக் கோலை பதிவு செய்தார். இது சர்வதேச காபந்து போட்டியில் சுனில் செற்றி அடித்த 90வது கோலாகும். அதே போன்று ஆட்டத்தின் 81வது நிமிடத்தில் இந்திய வீரர் உடான்டா, கோல் அடிக்க, இறுதியில் 4க்கு0 என்ற கணக்கில் இந்திய அணி , பாகிஸ்தானை வீழ்த்தியது. மழையையும் பொருட்படுத்தாமல் இந்த ஆட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, June 21, 2023, 23:24 [IST]
Other articles published on Jun 21, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+