சவுதியில் நாளை பொது விடுமுறை அறிவிப்பு.. கால்பந்தில் அர்ஜென்டினாவை வென்றதால் கொண்டாட்டம்
சவுதி : ஃபிஃபா உலககோப்பை கால்பந்து போட்டியில் தரவரிசையில் 3வது இடத்தில் இருந்த அர்ஜென்டினாவை, 51வது இடத்தில் இருடநத சவுதி அரேபியா 2க்கு1 என்ற கோல் கணக்கில் வென்றது.
கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 10வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை மெஸ்ஸி கோலாக மாற்றினார்.
போட்டியின் 27 வது நிமிடத்தில் அர்ஜென்டின வீரர் மார்டினிஸ் கோல் அடிக்க, அது ஆஃப் சைடு என்று அறிவிக்கப்பட்டது. இது போட்டியில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

சவுதி அரேபியா வெற்றி
இதனைத் தொடர்ந்து 48வது நிமிடத்தில் சவுதி வீரர் சாலே அல் செரியும், 53வது நிமிடத்தில் சவுதி வீரர் சலீமும் கோல் அடிக்க, இதில் சவுதி அணி 2க்கு1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. சவுதி அரேபியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் கோல் கீப்பர் அலோவைஸ். தான். அர்ஜென்டினா வீரர்கள் எவ்வளவோ முயன்றனர். ஆனால் இந்த அலோவைஸ் என்ற அரணை அவர்களால் 27 வது நிமிடத்திற்குப் பிறகு தாண்டவே முடியவில்லை.

வெற்றிக்கு காரணம்
முட்டினார்கள். மோதினார்கள். என்னென்னவோ செய்து பார்த்தார்கள். பாவம். எந்தப் பலனும் இல்லை. போஸ்ட்டை நோக்கி பந்து வந்தாலே இரைக்காக காத்திருக்கும் புலிபோல் பாய்ந்தார் அலோவைஸ். களத்தில் அலோவைஸின் கண்கள் கனல்போல் ஒளிர்ந்தன. சவுதியின் சரித்திர வெற்றியில் அலோவைஸிற்கு பெரும்பங்குண்டு. சவுதி கால்பந்து வரலாற்றில் அவரது பெயர் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படும்.

கொண்டாட்டம்
இந்த நிலையில் சவுதி அரேபியாவின் இந்த வரலாற்று வெற்றியை ஒட்டுமொத்த அரேபிய நாடுகளும் கொண்டாடி வருகின்றனர். இந்த ஆட்டத்தை மைதானத்தில் நேரில் பார்த்த கத்தார் அரசர் ஷேம் தமீம் பின் ஹமத், சவுதி கொடியை எந்தி வெற்றியை கொண்டாடினார். இதே போன்று யுஏஇ பிரதமரும், துபாயின் அரசருமான ஷேக் முகமது பின் ரஷித் , இது அரேபியர்களுக்கு கொண்டாட்டமான நாள் என்று பதிவிட்டுள்ளார்.

பொது விடுமுறை
இதே போன்று சவுதியின் பட்டத்துக்கு இளவரசர் முகமது பின் சல்மான், தங்களது அணி வெற்றியை கட்டி அணைத்து கொண்டாடினார். இந்த நிலையில் சவுதியின் வரலாற்று வெற்றியை கொண்டாடும் விதமாக நாளை புதன்கிழமை பள்ளி, கல்லூரி, தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள் என அனைவருக்கும் பொது விமுடுறையை அறிவிப்பதாக சவுதி அரசர் சல்மான் பின் அப்துல் ஆசிஸ் தெரிவித்துள்ளார். சவுதியின் வெற்றியை மக்கள் சாலையில் திரண்டு கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications