
80வது போட்டி
ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 80வது போட்டி கோவாவின் வாஸ்கோடகாமாவில் திலக் மைதானத்தில் இன்றைய தினம் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் புள்ளிகள் பட்டியலில் கீழே உள்ள எஸ்சி ஈஸ்ட் பெங்கால் மற்றும் பெங்களூரு எப்சி அணிகள் மோதவுள்ளன.

8வது இடத்தில் பெங்களூரு அணி
இந்த தொடரின் மூலம் அறிமுகமாகியுள்ள ஈஸ்ட் பெங்கால் அணி 14 போட்டிகளில் விளையாடி 13 புள்ளிகளுடன் ஐஎஸ்எல் 2020 -21 புள்ளிகள் பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது. இதேபோல முன்னாள் சாம்பியனான பெங்களூரு எப்சி அணி 14 போட்டிகளில் விளையாடி 15 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளது.

ஈஸ்ட் பெங்கால் வெற்றி
இரு அணிகளும் தொடரின் துவக்கத்திலிருந்தே நிலையான போட்டிகளை தரத் தவறியுள்ளன. இந்நிலையில் புள்ளிகள் பட்டியலில் கீழே உள்ள இரு அணிகளுக்கும் இந்த போட்டியால் எந்த சிறப்பான மாற்றமும் நிகழ வாய்ப்பில்லை. முன்னதாக இரு அணிகளும் மோதிய போட்டியில் ஈஸ்ட் பெங்கால் அணி 1க்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்டது குறிப்பிடத்தக்கது.

இரு அணிகளும் தீவிரம்
ஆயினும் தொடர்ந்து வெற்றிகளை பெறும் நிலையில் ப்ளே -ஆப் சுற்றிற்கு இரு அணிகளும் தகுதி பெற முயற்சி மேற்கொள்ளலாம். இந்த தீவிரம் இரு அணிகளுக்குள்ளும் காணப்படுகிறது. இன்றிரவு 7.30 மணியளவில் நடைபெறவுள்ள இந்த போட்டியை டிஸ்னி ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ டிவியில் கண்டு களிக்கலாம்.


Click it and Unblock the Notifications













