Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிபா உலகக் கோப்பை... அணிகள் அலசல் - ஒரு வீரரை நம்பி களமிறங்கும் செனகல்!

சென்னை: 21வது பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. ஜூன் 14ல் துவங்கி, ஜூலை 15 வரை நடக்கும் இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன.

2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது.

Senegal depends on mane to repeat 2002 success in the fifa world cup

ஜெர்மனி அல்லது பிரேசில் இந்த உலகக் கோப்பையை வெல்லும் அணிகளாக கருதப்படுகின்றன. அதே நேரத்தில் அர்ஜென்டீனா, ஸ்பெயின், பெல்ஜியம் போன்ற அணிகளுக்கும் வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.

இந்த உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகளின் பலம், பலவீனம் குறித்து மைகேல் தமிழ் விரிவாக அலசுகிறது.
---
நாடு : செனகல்

எச் பிரிவில் ஜப்பான், போலந்து, கொலம்பியாவுடன் இடம்பெற்றுள்ளது.

லீக் சுற்று ஆட்டங்கள் :
ஜூன் 19ல் போலந்து
ஜூன் 24ல் ஜப்பான்
ஜூன் 28ல் கொலம்பியா

பிபா தரவரிசை : 28

கடந்த உலகக் கோப்பையில் : தகுதிப் பெறவில்லை

கடைசியாக விளையாடிய உலகக் கோப்பை : 2002

உலகக் கோப்பையில் சிறந்த இடம் : 2002ல் காலிறுதி

முக்கிய வீரர்கள் : சாடியோ மானே, காலிடோ கோலிபாலி, டயாபரா சாகோ.

கோச் : ஆலோ சிஸ்ஸி
---
இந்த உலகக் கோப்பையில் மிகவும் வேகமாக செயல்படக் கூடிய, தடகள திறமைகள் கொண்ட அணியாக செனகல் உள்ளது.

எச் பிரிவில் இடம்பெற்றுள்ள போலந்து, ஜப்பான், கொலம்பியா மற்றும் செனகல் அணிகள் இதுவரை கோப்பையை வென்றதில்லை. அதனால் இந்தப் பிரிவில் இருந்து முன்னேறும் அணிகளுக்கு காலிறுதியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கலாம்.

கடந்த 2002ல் நடந்த உலகக் கோப்பையின்போது, அப்போதைய நடப்பு சாம்பியனான பிரான்ஸை வென்று காலிறுதிக்கு செனகல் முன்னேறியது. அப்போது அணியில் இடம்பெற்றிருந்த சிஸ்ஸி தற்போது செனகல் அணியின் கோச்சாக உள்ளார். கடந்த மூன்று உலகக் கோப்பைகளில் விளையாடும் வாய்ப்பு கிடைக்காத நிலையில், இந்த முறை செனகல் அதிர்ஷ்ட வாய்ப்பு மூலம் தகுதிப் பெற்றுள்ளது.

தகுதிச் சுற்று ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவிடம் செனகல் தோல்வியடைந்தது. ஆனால், நடுவர் ஜோசப் லாம்ப்டே மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. அதையடுத்து மீண்டும் நடந்த ஆட்டத்தில் செனகல் 2-0 என்று வென்று இந்த உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளது.

அணியில் குறிப்பிடும்படியான முன்கள மற்றும் பின்கள மற்றும் தடுப்பாட்டக்காரர்கள் உள்ளனர். இருந்தாலும், லிவர்பூல் அணிக்காக விளையாடியுள்ள சாடியோ மானேவை நம்பியே செனகல் அணி உள்ளது.

ஜப்பானுடன் வெற்றி, மற்ற இரண்டு அணிகளுடன் டிரா செய்தாலே, 2002லே நடந்ததுபோல் மீண்டும் கால் இறுதிக்கு நுழையும் வாய்ப்பு செனகலுக்கு கிடைக்கலாம்.

Story first published: Tuesday, June 5, 2018, 18:36 [IST]
Other articles published on Jun 5, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+