கொலம்பியா வென்று நாக் அவுட் முன்னேறியது.... செனகலின் வாய்ப்பில் மண்ணை அள்ளி போட்டது!
சமாரா: ஃபிபா உலகக் கோப்பையில் நடந்த எச் பிரிவு ஆட்டத்தில் செனகலை 1-0 என வென்று, நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது கொலம்பியா. தலா 4 புள்ளிகளுடன் இருந்தாலும், செனகலை விட குறைந்த மஞ்சள் அட்டை பெற்றதால் ஜப்பான் நாக் அவுட் முன்னேறியது. செனகல் பரிதாபமாக வெளியேறியது.
21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. போட்டியில் பங்கேற்கும் 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற மூன்று அணிகளுடன் விளையாடும்.
ஏ பிரிவில் இருந்து ரஷ்யா, உருகுவே, பி பிரிவில் இருந்து ஸ்பெயின், போர்ச்சுகல், சி பிரிவில் இருந்து பிரான்ஸ், டென்மார்க், டி பிரிவில் இருந்து குரேஷியா, அர்ஜென்டினா, இ பிரிவில் இருந்து பிரேசில், சுவிட்சர்லாந்து, எப் பிரிவில் இருந்து ஸ்வீடன், மெக்சிகோ, ஜி பிரிவில் இருந்து பெல்ஜியம், இங்கிலாந்து ஆகியவை நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
முதல் சுற்று லீக் ஆட்டங்கள் இன்றுடன் முடிகின்றன. எச் பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் ஜப்பான், போலந்தை சந்தித்தது. மற்றொரு ஆட்டத்தில் செனகல், கொலம்பியா மோதின.

செனகல் வென்றது
எச் பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் ஜப்பான் 2-1 என கொலம்பியாவை வென்றது. செனகல் 2-1 என போலந்தை வென்றது. அதற்கடுத்து நடந்த ஜப்பான், செனகல் ஆட்டம் 2-2 என டிராவானது. கொலம்பியா 3-0 என போலந்தை வென்றது.

கடும் போட்டி
தற்போதைய நிலவரப்படி ஜப்பான் மற்றும் செனகல் தலா 4 புள்ளிகளுடன் உள்ளன. கொலம்பியா 3 புள்ளிகளுடன் உள்ளது. இரண்டு தோல்விகளை சந்தித்த போலந்து பிரிவுச் சுற்றுடன் வெளியேறுகிறது.

யாருக்கு வாய்ப்பு
2002ல் நடந்த உலகக் கோப்பையில் முதல் முறையாக விளையாடிய செனகல், கால் இறுதி வரை நுழைந்தது. லீக் ஆட்டங்களில் அப்போதைய நடப்பு சாம்பியனான பிரான்ஸை வென்று அதிர்ச்சி அளித்தது. தற்போது 6வது உலகக் கோப்பையில் விளையாடும் கொலம்பியா, 16 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த உலகக் கோப்பையில் விளையாடியது. காலிறுதி வரை நுழைந்து அசத்தியது. ஜேம்ஸ் ரோட்ரிகுஸ் உள்ளதால் மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்கியது.

வென்றாக வேண்டும்
இன்று நடந்த லீக் ஆட்டத்தில் டிரா செய்தால் செனகலும், வென்றால்தான் கொலம்பியாவும் நாக் அவுட் முன்னேற முடியும் என்ற நிலையில் இரு களமிறங்கின. முதல் பாதியில் கோல் அதும் அடிக்கப்படவில்லை. 74வது நிமிடத்தில் மினா கோலடிக்க கொலம்பியா 1-0 என வென்று, நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. தலா 4 புள்ளிகளுடன் இருந்தாலும், செனகலை விட குறைந்த மஞ்சள் அட்டை பெற்றதால் ஜப்பான் நாக் அவுட் முன்னேறியது. செனகல் பரிதாபமாக வெளியேறியது.


Click it and Unblock the Notifications