ஃபிபா உலகக் கோப்பை... அணிகள் அலசல் - திறமைகள் இருந்தும் திணறும் குரேஷியா!
சென்னை:
21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. ஜூன் 14ல் துவங்கி, ஜூலை 15 வரை நடக்கும் இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன.
2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது.

ஜெர்மனி அல்லது பிரேசில் இந்த உலகக் கோப்பையை வெல்லும் அணிகளாக கருதப்படுகின்றன. அதே நேரத்தில் அர்ஜென்டீனா, ஸ்பெயின், பெல்ஜியம் போன்ற அணிகளுக்கும் வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.
இந்த உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகளின் பலம், பலவீனம் குறித்து மைகேல் தமிழ் விரிவாக அலசுகிறது.
நாடு : குரேஷியா
டி பிரிவில் அர்ஜென்டீனா, நைஜீரியா, ஐஸ்லாந்து அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.
லீக் சுற்று ஆட்டங்கள் :
ஜூன் 17ல் நைஜீரியா
ஜூன் 21ல் அர்ஜென்டீனா
ஜூன் 26ல் ஐஸ்லாந்து
ஃபிபா தரவரிசை : 20
கடந்த உலகக் கோப்பையில் : 2014ல் பிரிவு சுற்று
உலகக் கோப்பையில் சிறந்த இடம் : 1930ல் யுகோஸ்லாவியாவாக 3வது இடம், 1998ல் மூன்றாவது இடம்
முக்கிய வீரர்கள் : லூகா மோட்ரிக், இவான் ராகிடிக், இவான் பெரிசிக், மார்சலோ புரோசோவிக், மேடியோ கோவாசிக், மரியோ மேன்ட்ஜூகிக்
கோச் : ஜால்ட்கோ டாலிக்
இந்த உலகக் கோப்பையில் மிகவும் திறமையான வீரர்களை கொண்ட அணியாக குரேஷியா உள்ளது. குறிப்பாக உலகின் மிகவும் வலுவான நடுகள வீரர்களை கொண்டுள்ளது.
ஆனாலும், சர்வதேச அளவில் இவர்களுடைய திறமைகள் எடுபடவில்லை. இந்த உலகக் கோப்பையில் மிகவும் சீனியர் வீரர்கள் அதிகம் கொண்ட நாடாக குரேஷியா உள்ளது.
தகுதிச் சுற்று ஆட்டங்களிலும் தட்டுத்தடுமாறி உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளது. அணியில் உள்ள பெரும்பாலானோருக்கு இதுவே கடைசி உலகக் கோப்பையாக இருக்கும். அதனால் தங்களுடைய திறமையை முழுமையாக வெளிப்படுத்துவதுடன், தவறுகளே செய்யக் கூடாது.
டி பிரிவில் மிகவும் வலுவான ஆர்ஜென்டீனா முதலிடத்தைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது இடத்துக்குத்தான் மூன்று அணிகளுக்கு இடையே போட்டி நடக்க உள்ளது. இந்தச் சுற்றை தாண்டிவிட்டால், கால் இறுதிக்கு குரேஷியா நுழைவது நிச்சயம்.


Click it and Unblock the Notifications