ரூ.1000 கோடி... கொடிகட்டிப் பறக்கும் கால்பந்து பெட்டிங்!

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற வரும் உலக கோப்பை கால்பந்து போட்டிகளின் ஒவ்வொரு ஆட்டத்தின் போதும் இந்தியாவிலிருந்து கட்டப்படும் பெட்டிங் தொகை எவ்வளவு ரூ.1,000ம் கோடிக்கும் மேல் என்கிறார்கள்.
கிரிக்கெட்டைவிட கால்பந்துக்கு 20 மடங்கு அதிகமான பந்தயத் தொகைக்கு சூதாட்டம் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்திய சூதாட்ட தரகர்கள் சர்வதேச கிரெடிட் கார்டுகள் மூலம் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிரிக்கெட் போட்டிகளின்போது ஆசிய நாடுகள் மட்டுமே பங்கேற்பதால் சூதாட்டத் தொகை குறைவாக இருப்பதாகவும் கால்பந்துக்கு உலகளாவிய சந்தை இருப்பதால் ஆயிரக்கணக்கான கோடி இதில் புழங்குவதாகவும் உளவுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
இன்றைய நிலவரப்படி பிரேசில் மற்றும் அர்ஜென்டினா அணிகள் மீது தான் சூதாட்டதரகர்கள் அதிக தொகையை கட்டியுள்ளனராம்.
இந்தியாவுக்கென சொல்லிக் கொள்ளும்படி கால்பந்து அணி இல்லை என்றாலும், அந்த விளையாட்டில் புழங்கும் பெரும் பணம் இந்தியாவிலிருந்து போவது குறிப்பிடத்தக்கது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications