Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாவ்...எந்தா ஒரு கமெண்டரி... நம்மாளுங்க கத்துக்கங்கப்பா இதைப் பார்த்து!

சென்னை: நம்ம ஊர் தமிழ் கிரிக்கெட் கமெண்டரிகளைக் கேட்டு வயிற்றில் புளி + தக்காளி + தயிர் சாதத்தை சேர்த்து குழைத்துக் கரைத்து விட்டது போல உணரும், தமிழ் விளையாட்டுப் பிரியர்களுக்கு இந்த கமெண்டரியைக் கேட்டால் நிச்சயம் நாடி நரம்பு புடைக்கும்... வாவ் சொல்ல வைக்கும்.

உச்சரிப்பு, வேகம், ஸ்டைல், பிசிறில்லாமல் பேசும் லாவகம்.. கூடவே தமிழுடன் கை கோர்த்து கலக்கும் அசத்தல் என இந்த கமெண்டரி முழுவதும் பாராட்ட வேண்டிய விஷயங்கள் நிறையவே இருக்கு. விளையாட்டு என்றாலே வேகம், உத்வேகம்தானே.. அதை இந்த கமெண்டரியில் படு அழகாக கலந்திருக்கிறார் கமெண்டரி கொடுத்த ஷைஜு தாமோதரன்.

Shaiju Damodaran steals the show

நிச்சயம், தமிழில் இப்படி ஒரு கமெண்டரியைக் கேட்டதாக நினைவில்லை. மலையாளிகளைப் பொறுத்தவரை கிரிக்கெட்டை விட பிற விளையாட்டுக்களை விட கால்பந்து மீது அதிக மோகம் உண்டு. அதுவும் கூட லயிப்புடன் கூடிய இந்த நேரடி வர்னணைக்குக் காரணமாக இருக்கலாம்.

ஆங்கில கால்பந்து நேரலை வர்னணைகளைக் கேட்டால் எப்படி இருக்குமோ அதே வேகத்தில், அதே லாவகத்தில், அதே பாணியில் இந்த மலையாள கமெண்டரியில் கலக்கியுள்ளார் இதைச் செய்துள்ள ஷைஜு தாமோதரன். சோனி ஈஎஸ்பிஎன் டிவியில்தான் இந்த மலையாள கமெண்டரி படு பிரபலமாகியுள்ளது.

தாமோதரனின் கமெண்டரியில் வரும் விசேஷம் என்னவென்றால் இவர் எப்போதுமே தமிழில் பன்ச் வைத்துப் பேசுவது வழக்கம். சிங்கம் சிங்கிளாத்தான்டா வரும், வந்துட்டேன்னு சொல்லு, திரும்ப வந்துட்டேன்னு சொல்லு போன்ற பிரபலமான பன்ச் லைன்களை வைத்து இவர் கலகலப்பாக வர்னணை செய்து வருகிறார்.


கேட்கத் தவறாதீர்கள். முடிந்தால் பார்க்கவும் தவறாதீர்கள்!
Story first published: Thursday, June 28, 2018, 9:58 [IST]
Other articles published on Jun 28, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+