நெஞ்சை பதற வைக்கும் வீடியோ.. இந்தோனேஷிய கால்பந்து ரசிகர்கள் மோதல்.. மருத்துவமனையில் சோக காட்சி

கிழக்கு ஜாவா : இந்தோனேஷியாவில் கால்பந்து ரசிகர்களிடையே ஏற்பட்ட மோதலில் 174 பேர் உயிரிழந்த சம்பவம், ஓட்டு மொத்த விளையாட்டு ஆர்வலர்களையும் தலைக்குனிய வைத்துள்ளது.

Recommended Video

Football களத்தில் மோதல் 174 பேர் உயிரிழப்பு! Indonesian Premier League

விளையாட்டு என்பது எதிரிகளை கூட நண்பர்களாக மாற்றும் மேஜிக்கை கொண்டது. ஆனால் தற்போது விளையாட்டே நாட்டை துண்டாட கூடிய ஆயுதம் போல் மாறிவிட்டது.

போர் களத்தில் போல இப்படி சம்பவங்கள் நடைபெறுவது குறைந்துவிட்டன. ஆனால் விளையாட்டு களம், ரன களமான மாற தொடங்கிவிட்டன.

கால்பந்தில் பெரும் துயரம்.. மைதானத்தில் நிகழ்ந்த மோதல்.. 174 பேர் உயிரிழப்பு.. இந்தோனேஷியாவில் சோகம்கால்பந்தில் பெரும் துயரம்.. மைதானத்தில் நிகழ்ந்த மோதல்.. 174 பேர் உயிரிழப்பு.. இந்தோனேஷியாவில் சோகம்

உயிரிழந்தது எப்படி ?

இதயம் பலவீனமாக இருப்பவர்கள் இந்த காட்சிகளை பார்க்க வேண்டாம். அரிமா எஃப் சி அணியும் அதன் எதிரி அணியான பெர்சிபையா சுரபையா அணியும் மோதின ஆட்டத்தில் தான் மோதல் நிகழ்ந்தது. இதில் தற்போது வரை 174 பேர் உயிரழந்தனர். மோதலை தடுக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் , ஏற்கனவே கூட்ட நெரிசலில் சிக்கியவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர்.

பதற வைக்கும் காட்சி

இதில் மைதானத்தில் 100 கணக்கான மக்கள் ஒருவருக்கு ஒருவரை தாக்கி கொள்ளும் காட்சி தற்போது வெளியாகி உள்ளது. இதில் கையில் கிடைக்கும் ஆயுதத்தை வைத்து எல்லாம் ஒருவரை ஒருவர் மக்கள் தாக்கி கொண்டனர். அப்போது போலீசாரும் மைதானத்திற்குள் புகுந்து மக்களை கலைத்தனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மருத்துவமனையில் அலறல்

மேலும், காயமடைந்த ரசிகர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காட்சிகளும் தற்போது வெளியே வந்துள்ளது. அதில், ரசிகர்களின் சடலம் மருத்துவமனையில் தரையில் போடப்பட்டுள்ளது. இதில் அசைவற்ற நிலையில் கிடைக்கும் ரசிகர்களுக்கு மருத்துவர்கள் சிபிஆர் சிகிச்சைகளை வழங்கி காப்பாற்ற முயற்சிக்கும் சோக காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.

விசாரணை

இந்த சம்பவத்திற்கு உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களும், தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 38 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்க கூடிய மைதானத்தில் 42 ஆயிரம் பேர் வந்ததும், எதிரணி ரசிகர்களுக்கு டிக்கெட் வழங்க தடை விதிக்கப்பட்டும் எப்படி அவர்கள் உள்ளே நுழைந்தனர் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS
English summary
Shocking visuals of Indonesia football fans clash – and heart breaking scenes நெஞ்சை பதற வைக்கும் வீடியோ.. இந்தோனேஷிய கால்பந்து ரசிகர்கள் மோதல்.. மருத்துவமனையில் சோக காட்சி
Story first published: Sunday, October 2, 2022, 16:36 [IST]
Other articles published on Oct 2, 2022

Latest Videos

  + More
  + மேலும்
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X