Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கால்பந்து உலக கோப்பை.. "இந்தியா" வெல்லுமாம்லப்பா..! டெல்லிக்காரர்கள் சொல்றாங்க!!

டெல்லி: உலக கோப்பை கால்பந்தாட்டத்தில் இந்தியாதான் வெற்றி பெறும் என்று மிகுந்த நம்பிக்கையுடன் டெல்லியிலுள்ள இளைஞர்களும்,

இளம்பெண்களும் நம்பிக்கையுடன், பெருமிதத்துடன் கூறியுள்ளனர். உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் கடந்த 12ம்தேதி பிரேசில் நாட்டில் தொடங்கி நடந்துவருகின்றன. தகுதி சுற்றுகளில் வெற்றி பெற்ற 32 அணிகள், இதில் பங்கேற்று ஆடி வருகின்றன.

ஆசிய அணிகள்

ஆசிய அணிகள்

ஆசியாவில் இருந்து ஈரான், தென்கொரியா உள்ளிட்ட சில அணிகள் தகுதி சுற்றில் தேர்வாகி உலக கோப்பையில் விளையாடியபோதிலும், இந்தியாவோ அதன் அண்டை நாடுகள் எதுவுமோ இந்த போட்டித்தொடரில் பங்கேற்கவில்லை.

பலே டெல்லிவாலாக்கள்

பலே டெல்லிவாலாக்கள்

கால்பந்து குறித்த அடிப்படை அறிவு உள்ள பெரும்பாலானோருக்கு இந்த விவரம் தெரியும். ஆனால், இந்திய தலைநகர் டெல்லியிலுள்ள இளைஞர்களோ, கால்பந்தாட்ட உலக கோப்பையில் இந்தியா பங்கேற்றுள்ளதாக நினைத்துக்கொண்டுள்ளனர்.

'இந்திய அணிக்கு' வாழ்த்து

'இந்திய அணிக்கு' வாழ்த்து

இதுகுறித்து தொலைக்காட்சி ஒன்றுபல இளைஞர்களிடம் கருத்து கேட்டதற்கு இவ்வாறு அவர்கள் தெரிவித்து இந்தியா வெற்றி பெற வாழ்த்துகளையும் கூறியுள்ளனர்.

இதில் பெருமிதம் வேறு

இதில் பெருமிதம் வேறு

காதலியுடன் பூங்கா வந்திருந்த இளைஞரிடம் கருத்து கேட்டதற்கு "இந்தியா உலக கோப்பை போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றதற்காக நாங்கள் பெருமை கொள்கிறோம்" என்று உற்சாகம் பொங்க தெரிவித்தார்.

வெற்றி நமதே

வெற்றி நமதே

நண்பர்கள் இருவரிடம் கருத்து கேட்டபோதும், இந்தியா அனைத்து வகை போட்டிகளிலும் கண்டிப்பாக வெற்றி பெறும் வகையில் வளர்ந்த நாடாகிவிட்டதாக சர்ட்டிபிகேட் கொடுத்தார். சீக்கிய இளைஞர் ஒருவரிடம் கேட்டபோது, "இந்தியாதான் வெற்றிவாகை சூடப்போகிறது" என்று ஆரூடம் தெரிவித்தார்.

கருத்து கூறி முடிந்த பிறகு, இந்தியா உலக கோப்பையில் விளையாடவில்லை என்ற உண்மையை டிவி சேனல் தொகுப்பாளர் கூறியபோது அத்தனைபேர் முகத்திலும் அசடு வழிந்ததே பார்க்கலாம். இப்படியே போனால் இந்தியா விரைவில் வல்லரசாகிவிடுமோ..?

Story first published: Tuesday, June 24, 2014, 13:12 [IST]
Other articles published on Jun 24, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+