Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு சீசனுக்கு ரூ.1,687 கோடி.. வலைவிரிக்கும் சவுதி அரேபியா கிளப்.. ஏற்பாரா கிறிஸ்டியானோ ரொனால்டோ?

டெல்லி: நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து விலகியுள்ள நிலையில், அடுத்ததாக சவுதி அரேபியாவைச் சேர்ந்த கிளப் அணிக்காக விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமகால கால்பந்து விளையாட்டின் தூதுவராகவே ரொனால்டோ திகழ்ந்து வருகிறது. இவர் கிளப் போட்டிகளில் கடந்த 2003ம் ஆண்டு, முதல் முறையாக மான்செஸ்டர் யுனைட்டெட் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்னர் 2009ம் ஆண்டு முதல் ரியல் மாட்ரிட் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட ரொனால்டோ, 2018ம் ஆண்டு யுவெண்டஸ் அணிக்காக விளையாடினார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு முதல் மீண்டும் தனது தாய் வீடான மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாட தொடங்கினார். நடப்பு கால்பந்து சீசனில் அந்த அணிக்காக பல்வேறு போட்டிகளில் ரொனால்டோ களமிறக்கப்படவில்லை. இதனால் அணிக்குள் ஏதேனும் பிரச்சினை உள்ளதா என்று ரசிகர்கள் பேச தொடங்கினர்.

ரொனால்டோ பேட்டி

ரொனால்டோ பேட்டி

இதனிடையே பியர்ஸ் மோர்கனுக்கு அளித்த நேர்காணலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார். அதில், மான்செஸ்டர் யுனைடெட் அணியின் பயிற்சியாளரான எரிக் டென் ஏன் என்னை மிகவும் மோசமாக விமர்சிக்கிறார் என எனக்கு தெரியவில்லை. அவர் எனக்கு உரிய மரியாதையை வழங்குவதில்லை. எனவே, அவருக்கு மரியாதை தர நானும் விரும்பவில்லை. பலருக்கு நான் இந்த அணியில் இருப்பது பிடிக்கவில்லை என்று தெரிவித்தார்.

மான்செஸ்டர் யுனைடெட் அறிவிப்பு

மான்செஸ்டர் யுனைடெட் அறிவிப்பு

இதுமட்டுமல்லாமல், மான்செஸ்டர் அணியின் உரிமையாளர்கள் அணியின் வளர்ச்சி குறித்தோ, விளையாட்டை குறித்தோ கவலைப்படவில்லை. அணிக்கு கிடைத்த புகழை வைத்து பணம் சம்பாதிப்பதே உரிமையாளர்களின் குறிக்கோளாக உள்ளது என குற்றம் சாட்டினார். இதனைத் தொடர்ந்து நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கிளப்பை விட்டு வெளியேறுவதாக மான்செஸ்டர் யுனைடெட் நிர்வாகம் அறிவித்தது.

சவுதி அரேபியா கிளப்

சவுதி அரேபியா கிளப்

இதனால் ரொனால்டோ அடுத்ததாக எந்த கிளப்பில் விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வந்தது. இந்த நிலையில் சவுதி அரேபியாவைச் சேர்ந்த AL NASSR என்ற கிளப் ரொனால்டோவை ஒப்பந்தம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரொனால்டோவை ஒப்பந்தம் செய்ய 200 மில்லியன் யூரோ வழங்க முன் வந்துள்ளது.

ரூ.1,687 கோடி ஒப்பந்தம்?

ரூ.1,687 கோடி ஒப்பந்தம்?

ஒரு சீசனுக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,687 கோடி வழங்க முன்வந்துள்ளது. சுமார் 2.5 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சவுதி அரேபியா அணியின் ஆஃபரை ரொனால்டோ ஏற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் நட்சத்திர வீரர்கள் ஐரோப்பிய லீக் போட்டிகளில் விளையாடுவதிலேயே அதிக ஆர்வம் காட்டுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, November 30, 2022, 21:25 [IST]
Other articles published on Nov 30, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+