For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

பிபா உலகக் கோப்பை... அணிகள் அலசல் - தென்கொரியா குடைச்சல் கொடுக்கும்!

பிபா உலகக் கோப்பை போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. இதில் பங்கேற்கும் தென்கொரியா அணி குறித்த விரிவான அலசல்.

சென்னை: 21வது பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. ஜூன் 14ல் துவங்கி, ஜூலை 15 வரை நடக்கும் இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன.

2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது.

South korea may give problem to other teams in the fifa world cup

ஜெர்மனி அல்லது பிரேசில் இந்த உலகக் கோப்பையை வெல்லும் அணிகளாக கருதப்படுகின்றன. அதே நேரத்தில் அர்ஜென்டீனா, ஸ்பெயின், பெல்ஜியம் போன்ற அணிகளுக்கும் வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.

இந்த உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகளின் பலம், பலவீனம் குறித்து மைகேல் தமிழ் விரிவாக அலசுகிறது.
---
நாடு : தென்கொரியா

எப் பிரிவில் ஜெர்மனி, ஸ்வீடன், மெக்சிகோ உடன் இடம் பெற்றுள்ளது.

லீக் சுற்று ஆட்டங்கள் :
ஜூன் 18ல் ஸ்வீடன்
ஜூன் 23ல் மெக்சிகோ
ஜூன் 27ல் ஜெர்மனி

பிபா தரவரிசை : 61

கடந்த உலகக் கோப்பையில் : பிரிவு சுற்றில் வெளியேறியது

உலகக் கோப்பையில் சிறந்த இடம் : 2002ல் நான்காவது இடம்

முக்கிய வீரர்கள் : சான் ஹூங்க்மின், குவான் குயிங்க் வான், ஜா சியோல் கூ.

கோச் : ஷின் டே யங்க்
---
1985 முதல் தொடர்ந்து உலகக் கோப்பையில் தென் கொரியா விளையாடுகிறது. மேலும் 10வது முறையாக உலகக் கோப்பையில் விளையாட உள்ளது. இந்த சாதனையை இதுவரை எந்த ஆசிய அணியும் செய்ததில்லை.

உலகக் கோப்பைக்கான ஆசிய அளவிலான தகுதிச் சுற்று போட்டியில் ஏ பிரிவில் இரண்டாவது இடத்தை தென்கொரியா பெற்றது. ஆனால், தகுதிச் சுற்று ஆட்டங்களில் தடுப்பாட்டத்தில் திணறியது.

தற்போது எப் பிரிவில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்ளிட்ட அணிகள் உள்ளன. அவற்றுக்கு எதிராக சிறிய தவறு செய்தாலும், தேற முடியாது.

தென்கொரியாவின் ஜூனியர் அணிக்கு பயிற்சி அளித்து வந்த ஷின், தற்போது சீனியர் அணியின் கோச்சாக உள்ளார். அவருடைய திட்டங்கள் எப்படி இருக்கும் என்பது, போட்டியின்போதுதான் தெரியவரும்.

லீ சுங்க் யங்க், கிம் ஜின் சூ ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை. அதனால் ஷின் ஹூங்க்மினை நம்பியே இருக்க வேண்டிய நிலையில் அணி உள்ளது.

முதலில் நடக்கும் பிரிவு சுற்றிலேயே தென்கொரியா வெளியேறிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் முதல் சுற்று லீக் ஆட்டங்களில், யானையின் காதுக்குள் புகுந்த எறும்புபோல், மற்ற அணிகளுக்கு தென்கொரியா குடைச்சல் கொடுக்கும் என்பதை எதிர்பார்க்கலாம்.

Story first published: Thursday, June 7, 2018, 15:37 [IST]
Other articles published on Jun 7, 2018
English summary
South korea may stun the others teams in the group during the fifa world cup.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+