Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஃபிபா உலகக்கோப்பை.. கலைநிகழ்ச்சியில் பிடிஎஸ் இசைக்குழு.. நடனத்தில் அசத்த காத்திருக்கும் இந்திய நடிகை

தோஹா: கத்தார் உலகக்கோப்பைக்கான கலை நிகழ்ச்சிகளில் பிரபல இசைக்குழுவான பிடிஎஸ் குழு கலந்துகொள்ள உள்ளதாக தெரிய வந்துள்ளது.

உலகளவில் சிறிய நாடுகளில் ஒன்றாக கத்தார் நடத்தும் கால்பந்து உலகக்கோப்பை பற்றிய பேச்சுகள் சமூக வலைதளங்களில் அதிகமாகியுள்ளது. 200க்கும் மேற்பட்ட நாடுகளில் உற்றுநோக்கம், ஒரு விளையாட்டு தொடர் நாளை தொடங்க உள்ளது.

1963ம் ஆண்டு ஃபிபாவின் அங்கீகாரம் பெற்ற கத்தார், ஒருமுறை கூட கால்பந்து உலகக்கோப்பைத் தொடருக்கு தகுதி பெற்றதே இல்லை. இந்த முறை போட்டிகளை நடத்தும் நாடு என்பதால், முதல்முறையாக உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் கத்தார் பங்கேற்கிறது.

முதல் போட்டி

முதல் போட்டி

நாளை தொடங்கவுள்ள உலகக்கோப்பைத் தொடரின் முதல் போட்டி, 60 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் கட்டப்பட்டுள்ள அல் பேத் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் போட்டியை நடத்தும் கத்தார் அணியை எதிர்த்து ஈக்வேடார் அணியை விளையாடுகிறது. கால்பந்து உலகக்கோப்பையை நேரில் காண்பதற்காக ஏராளமான நாடுகளில் இருந்தும் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.

பிடிஎஸ் குழு

பிடிஎஸ் குழு

இதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பை கால்பந்து தொடர் தொடங்கவுள்ள நிலையில், கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக உலகப்புகழ் பெற்ற பிடிஎஸ் இசைக் குழு பல்வேறு பாடல்களை பாட உள்ளது. அந்த குழுவின் 7 பேர் கொண்ட ஆடவர் குழு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கலை நிகழ்ச்சியில் இந்திய நடிகை

கலை நிகழ்ச்சியில் இந்திய நடிகை

அதேபோல் 2010ம் ஆண்டு கால்பந்து உலகக்கோப்பைக்கான பாடலை பாடிய ஷகிரா கலை நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். அதேபோல் ராபி வில்லியம்ஸ் மற்றும் இந்திய நடிகையான நோரா ஃபடேஹி ஆகியோரும் நடனமாட உள்ளனர். சர்வதேச பிரபலங்கள் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளது ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த உலகக்கோப்பைத் தொடரில் பிரிட்டன் பாப் பாடலர் வில்லியம்ஸ் கலை நிகழ்ச்சிகளில் ஈடுபட்டார்.

கத்தார் செய்த ஆச்சரியம்

கத்தார் செய்த ஆச்சரியம்

குறைந்த மக்கள் தொகையை கொண்ட கத்தார், உலகக்கோப்பை கால்பந்து தொடருக்காக 220 பில்லியன் டாலர் செலவு செய்து 8 கால்பந்து மைதானங்கள், புதிய விமான நிலையம், மெட்ரோ ரயில், நெடுஞ்சாலை, நட்சத்திர விடுதிகள் என கடந்த 10 ஆண்டுகளில் அனைத்து நாடுகளும் ஆச்சரியப்படும் அளவிற்கு ஏற்பாடுகளை செய்துள்ளது.

Story first published: Saturday, November 19, 2022, 15:24 [IST]
Other articles published on Nov 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+