Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

FIFA: உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஸ்பெயின்.. போராடித் தோற்ற பிரான்ஸ்

டல்லாஸ்: 2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. 2010 ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறி கோப்பையையும் வென்ற ஸ்பெயின் அணி, 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஏடி&டி மைதானத்தில் நடைபெற்றது இந்தப் போட்டி இறுதிப்போட்டிக்கு இணையான விறுவிறுப்புடன் அரங்கேறியது. இந்தப் போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தின. ஆட்டத்தின் 22-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் இளம் நட்சத்திரம் லமின் யமால் பிரான்ஸ் கோல் பகுதிக்கு அருகே கீழே தள்ளி விடப்பட்டதால், ஸ்பெயினுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.

Spain Beats France 2-0 to enter FIFA World Cup 2026 final for first time in 16 Years

இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய நட்சத்திர வீரர் மைக்கேல் ஓயர்சபால், பிரான்ஸ் கோல்கீப்பர் மைக் மைக்னானை தாண்டி பந்தை அடித்து முதல் கோல் பெற்றுத் தந்தார். இது இந்த உலகக்கோப்பை தொடரில் அவர் அடித்த 5-வது கோலாகும். இந்த கோலால் ஸ்பெயின் அணி 1-0 என முன்னிலை பெற்றதுடன், பிரான்ஸ் அணிக்கு ஆரம்பத்திலேயே நெருக்கடி ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் ஸ்பெயின் அணியின் ஆதிக்கம் தொடர்ந்தது. 58-வது நிமிடத்தில் டேனி ஆல்மோ கொடுத்த துல்லியமான பாஸைப் பெற்ற பெட்ரோ போரோ, மிக நேர்த்தியாக மற்றொரு கோல் அடித்து ஸ்பெயினின் வெற்றியை 2-0 என உறுதி செய்தார்.

இந்த உலகக்கோப்பையில் போரோ அடித்த 2-வது கோல் இதுவாகும். பிரான்ஸ் அணியின் பயிற்சியாளர் டிடியர் டெஷாம்ப்ஸ் தொடர்ந்து வீரர்களை மாற்றிப் பார்த்தும், ஸ்பெயின் அணியின் பலமான தற்காப்பு அரணை முறியடிக்க முடியவில்லை. குறிப்பாக, இந்தத் தொடரில் அதிக கோல் அடித்து தங்க காலணி விருதுக்கான பந்தயத்தில் முன்னிலையில் இருந்த பிரான்ஸ் கேப்டன் கைலியன் எம்பாப்பேவை ஸ்பெயின் வீரர்கள் பந்துடன் நகரவே விடாமல் கட்டிப்போட்டனர்.

இந்தத் தோல்வியின் மூலம், 2018 சாம்பியனான மற்றும் 2022 ரன்னர்-அப்பான பிரான்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. அடுத்து பிரான்ஸ் அணி சனிக்கிழமை அன்று மியாமியில் நடைபெறவுள்ள 3-வது இடத்திற்கான போட்டியில் விளையாட உள்ளது. மற்றொருபுறம், ஸ்பெயின் அணி கடந்த 37 போட்டிகளாக தோல்வியே சந்திக்காத அணியாக வரலாற்று சாதனை படைத்துள்ளது.

கால்பந்து உலகக்கோப்பை வரலாற்றில் இப்படி நடந்ததே இல்லை.. முதன்முறையாக அரையிறுதியில் டாப் 4 அணிகள்

கால்பந்து உலகக்கோப்பை வரலாற்றில் இப்படி நடந்ததே இல்லை.. முதன்முறையாக அரையிறுதியில் டாப் 4 அணிகள்

கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு எந்தவொரு சர்வதேச போட்டியிலும் ஸ்பெயின் தோற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஐரோப்பிய சாம்பியனாக இருக்கும் ஸ்பெயின் அணி, உலகக்கோப்பையையும் வென்று புதிய வரலாறு படைக்கும் முனைப்பில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை அன்று நியூஜெர்சியில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணி, அர்ஜென்டினா - இங்கிலாந்து அரையிறுதிப் போட்டியின் வெற்றியாளரை எதிர்கொள்ள உள்ளது.

IND vs ENG: “இந்திய அணியின் வெற்றிக்கு காரணமே இவங்கதான்.. நம்பிக்கை தந்திருக்காங்க”.. கில் மகிழ்ச்சி

IND vs ENG: “இந்திய அணியின் வெற்றிக்கு காரணமே இவங்கதான்.. நம்பிக்கை தந்திருக்காங்க”.. கில் மகிழ்ச்சி
Story first published: Wednesday, July 15, 2026, 7:20 [IST]
Other articles published on Jul 15, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+