For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

அதிரடி பயிற்சியாளரின் அதிர்ச்சி.. பதவியை ராஜினாமா செய்த என்ரிக்கே.. ஸ்பெயின் தோல்விக்கு பொறுப்பேற்பு

தோஹா: ஃபிஃபா உலகக்கோப்பைத் தொடரின் நாக் அவுட் சுற்றில் ஸ்பெயின் அணி அடைந்த தோல்விக்கு பொறுப்பேற்று, பயிற்சியாளர் லூயிஸ் என்ரிக்கே பதவி விலகியுள்ளார்.

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அண்மையில் முடிந்த நாக் அவுட் சுற்றில் மொராக்கோ அணியிடம் தோல்வியடைந்து வெளியேறியுள்ளது முன்னாள் சாம்பியனான ஸ்பெயின் அணி.

குறிப்பாக நாக் அவுட் சுற்றுக்கு வந்துவிட்டதால், ஸ்பெயின் அணி வீரர்கள் ஆயிரம் முறை பெனால்ட்டி பயிற்சியை எடுத்துக் கொள்ளுமாறு அந்த அணியின் பயிற்சியாளர் லூயிஸ் என்ரிக்கே கூறியிருந்தார்.

கத்தார் ஃபிஃபா உலககோப்பையில் எதிரொலித்த திராவிட மாடல்.. ஸ்டாலின் சாதனையை கொண்டு சென்ற தமிழர் கத்தார் ஃபிஃபா உலககோப்பையில் எதிரொலித்த திராவிட மாடல்.. ஸ்டாலின் சாதனையை கொண்டு சென்ற தமிழர்

ஸ்பெயின் அணி வெளியேற்றம்

ஸ்பெயின் அணி வெளியேற்றம்

ஆனால் அந்தப் பயிற்சியில் ஒன்றைக்கூட ஆட்டத்தில் அவர்களால் செயல்படுத்த முடியவில்லை. பெனால்டி ஷுட் அவுட் முறையில் ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் மொராக்கோ அணியிடம் தோல்வியடைந்து வெளியேறியது. உலகக் கோப்பை பெனால்ட்டி ஷூட் அவுட்டில் ஸ்பெயின் அணி ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் போனது இதுவே முதல் முறையாகும்.

யார் இந்த லூயிஸ் என்ரிக்கே

யார் இந்த லூயிஸ் என்ரிக்கே

இந்த நிலையில் ஸ்பெயின் அணியின் பயிற்சியாளர் லூயிஸ் என்ரிக்கே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 2020ம் ஆண்டு யூரோ தொடரில் பங்கேற்ற ஸ்பெயின் அணியை அறிவித்தபோதே அதிர்வலைகளை ஏற்படுத்தியவர் லூயிஸ் என்ரிக்கே. இவ்வளவு ஏன் செர்ஜியோ ராமோஸ் போன்ற முன்னணி வீரர்கள் சிலரை அணியில் தேர்வு செய்யாமல் இருந்தார். இருப்பினும் யூரோ கோப்பையில் ஸ்பெயின் அணியை அரையிறுதி வரை அழைத்து சென்றார். அந்த அரையிறுதியிலும் இத்தாலி அணியிடம் பெனால்டி ஷூட் அவுட் முறையிலேயே தோல்வியடைந்தது.

லூயிஸ் என்ரிக்கே ராஜினாமா

லூயிஸ் என்ரிக்கே ராஜினாமா

இவரது பதவிக்காலம் நடப்பாண்டு இறுதி வரை இருந்த நிலையில், உலகக்கோப்பைத் தோல்விக்கு பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதன் மூலம் உலகக்கோப்பைத் தொடர் தோல்விக்கு பின் ராஜினாமா செய்யும் ஸ்பெயின் அணியின் 4வது பயிற்சியாளர் என்று சோகமான பெருமையையும் லூயிஸ் என்ரிக்கே பெற்றுள்ளார். இவருக்கு முன்பாக 2018ம் ஆண்டு ஸ்பெயின் அணியின் பயிற்சியாளராக இருந்த பெர்னாண்டோ ஹியரோ பதவியை ராஜினாமா செய்தார்.

புதிய பயிற்சியாளர்

புதிய பயிற்சியாளர்

இதனிடையே ஸ்பெயின் அணியின் புதிய பயிற்சியாளராக லூயிஸ் டி லா ஃபுயண்டே நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2013ம் ஆண்டு முதல் ஸ்பெயின் யு-15 அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். நட்சத்திர வீரர்களான மார்கோ அசான்சியோ, கோல் கீப்பர் உனாய் சிமோன், எரிக் கார்சியா, டோரஸ், பெட்ரி, கார்லஸ் சோலர், டானி ஓல்மோ உள்ளிட்ட ஏராளமான வீரர்களுடன் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, December 8, 2022, 20:08 [IST]
Other articles published on Dec 8, 2022
English summary
Coach Luis Enrique has resigned after taking responsibility for Spain's defeat in the knockout stages of the FIFA World Cup.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X