Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நாளை உலக கோப்பை துவக்கம்.. இன்று ஸ்பெயின் அணி கோச் திடீர் நீக்கம்..கால்பந்து ரசிகர்கள் ஷாக் !

சென்னை: ஃபிபா உலகக் கோப்பை போட்டிகள் நாளை துவங்க உள்ளது. இந்த நிலையில், ஸ்பெயின் அணியின் கோச் ஜூலென் லோபடேகய் இன்று திடீரென்று நீக்கப்பட்டார். ரியல் மாட்ரிட் அணியின் கோச்சாக பொறுப்பேற்க உள்ளதால், அவர் நீக்கப்பட்டுள்ளார். புதிய கோச்சாக முன்னாள் வீரரும், கால்பந்து அணியின் இயக்குநராக இருந்த பெர்னான்டோ ரூயில் ஹியரோ நியமிக்கப்பட்டுள்ளார்.

21வது ஃபிபா உலகக் கோப்பை போட்டிகள் ரஷ்யாவில் நாளை துவங்குகின்றன. இதில் பி பிரிவில் ஸ்பெயின் இடம்பெற்றுள்ளது. நாளை மறுநாள் தனது முதல் ஆட்டத்தில் ஸ்பெயின் விளையாட உள்ளது.

இந்த நிலையில், ஸ்பெயின் அணியின் கோச்சான ஜூலென் லோபடேகய், புகழ்பெற்ற ரியல் மாட்ரிட் கால்பந்து அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்க உள்ளார்.

மூன்று ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தில் 51 வயதாகும் ஜூலென் கையெழுத்திட்டுள்ளார். இதற்கான முறையான அறிவிப்பு நேற்று வெளியானது. உலகக் கோப்பைக்குப் பிறகு புதிய பொறுப்பை அவர் ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டது.

ஜிதானே விலகல்

ஜிதானே விலகல்

சமீபத்தில் நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டியில் ரியல் மாட்ரிட் அணி சாம்பியன் பட்டத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக வென்றது. அணியின் கோச்சாக இருந்த பிரான்ஸ் நாட்டின் முன்னாள் வீரரான ஜிதானே திடீரென்று கோச் பொறுப்பில் இருந்து விலகினார்.

உடனடியாக நீக்கம்

உடனடியாக நீக்கம்

அவருக்கு மாற்றாக, ரியல் மாட்ரிட் தலைமை கோச்சாக ஜூலென் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பு வெளியான உடனேயே, அவரை கோச் பதவியில் நீக்குவதாக ஸ்பெயின் அணி அறிவித்துள்ளது. அவருக்கு மாற்று யார் என்பது அறிவிக்கப்படவில்லை.

மேலும் 2 ஆண்டுகள் உள்ளது.

2016ல் யூரோ கோப்பை போட்டியில் காலிறுதிக்கு முந்தையச் சுற்றில் ஸ்பெயின் தோல்வியடைந்தது. அப்போது கோச்சாக நியமிக்கப்பட்டார் ஜூலென். அவருடைய பதவிக் காலம் 2020 வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.

கோச்சாக அனுபவம்

கோச்சாக அனுபவம்

ஜூலென் ஸ்பெயின் தேசிய அணிக்காக நீண்ட காலம் பயிற்சி அளித்த அனுபவம் உள்ளனர். ஸ்பெயின் 17, 19, 20, 21 வயதுக்குட்பட்டோர் அணிகளுக்காக அவர் பயிற்சி அளித்தார். அதன் பிறகே சீனியர் அணியின் கோச்சானார். 2014ல் போர்டோ கிளப் அணிக்காக பயிற்சி அளித்தார். முதல் முறையாக மிகப் பெரிய கிளப் அணியான ரியல் மாட்ரிட் அணிக்கு பயிற்சி அளிக்க உள்ளார்.

Story first published: Wednesday, June 13, 2018, 19:05 [IST]
Other articles published on Jun 13, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+