Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“அர்ஜென்டினா அடித்த ஒரு ஷாட் கூட..”.. ஸ்பெயின் செய்த முரட்டு சம்பவம்.. கோல் போஸ்ட் பக்கமே போகவில்லை

நியூயார்க்: அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையிலான 2026 உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியின் புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. இதில், ஆட்டம் முழுவதும் ஸ்பெயின் அணி அர்ஜென்டினாவை முழுமையாக முடக்கி ஆதிக்கம் செலுத்தியது புள்ளி விவரங்களின் மூலம் தெளிவாகத் தெரியவந்துள்ளது.

நியூயார்க் நியூ ஜெர்சி மைதானத்தில் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில், கூடுதல் ஆட்ட நேர முடிவில் ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. வெறும் ஒரு கோல் அடித்து ஸ்பெயின் வெற்றி பெற்றதால் இந்தப் போட்டியில் அர்ஜென்டினாவும் சிறப்பாக ஆடி இருக்கும் என்று நினைத்தால் அதுதான் இல்லை. அர்ஜென்டினா அடித்த ஒரு ஷாட் கூட கோல் போஸ்ட் அருகே செல்லவில்லை. இதை வைத்தே ஸ்பெயின் எப்படி ஆடியது என்பதை புரிந்து கொள்ளலாம்.

Spain dominates with ball as Argentina got zero shots on target in FIFA World Cup Final 2026

இந்தப் போட்டியில் ஸ்பெயின் அணி பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி அர்ஜென்டினாவை கட்டுக்குள் வைத்து இருந்தது. இந்த இறுதிப் போட்டியின் புள்ளிவிவரங்களின்படி, ஸ்பெயின் அணி அர்ஜென்டினாவின் கோல் எல்லையை நோக்கி 20 முறை பந்தை கொண்டு சென்று தாக்குதல் நடத்தியது. அதில் 11 ஷாட்டுகள் இலக்கை நோக்கி, அதாவது கோல் போஸ்ட்டை நோக்கி பாய்ந்தன. ஆனால், அர்ஜென்டினா அணியால் வெறும் 3 முறை மட்டுமே கோல் அடிக்க முயற்சி செய்ய முடிந்தது. அதிலும் ஒரு முறை கூட இலக்கை நோக்கி பந்தை அடிக்க முடியவில்லை (0 ஷாட்ஸ் ஆன் டார்கெட்) என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மைதானத்தில் பந்தை தங்கள் வசம் வைத்திருந்ததிலும் ஸ்பெயின் அணி ஆதிக்கம் செலுத்தியது. ஸ்பெயின் 68 சதவீதம் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தது. அர்ஜென்டினா வெறும் 32 சதவீதம் மட்டுமே பந்தை தன் வசம் வைத்திருந்தது. ஸ்பெயின் வீரர்கள் தங்களுக்குள் 803 பாஸ்கள் செய்து அசத்தினர். அவர்களின் பாஸ் துல்லியம் 90 சதவீதமாக இருந்தது. இதற்கு நேர்மாறாக, அர்ஜென்டினா அணி 445 பாஸ்கள் மட்டுமே செய்ததுடன், அவர்களின் துல்லியம் 78 சதவீதமாக மட்டுமே இருந்தது.

அர்ஜென்டினா வீரர்கள் 24 முறை ஃபவுல் செய்தனர். இதனால் அந்த அணிக்கு 5 மஞ்சள் அட்டைகளும், 1 சிவப்பு அட்டையும் காண்பிக்கப்பட்டன. ஸ்பெயின் அணி 21 ஃபவுல் செய்தபோதிலும், அவர்களுக்கு ஒரு மஞ்சள் அட்டை கூட வழங்கப்படவில்லை. கார்னர்களை பொறுத்தவரை ஸ்பெயின் 9 கார்னர்களையும், அர்ஜென்டினா 4 கார்னர்களையும் பெற்றன. ஒட்டுமொத்தமாக, அனைத்து பிரிவுகளிலும் அர்ஜென்டினாவை விட பல மடங்கு சிறப்பாக செயல்பட்டு ஸ்பெயின் தகுதியான வெற்றியைப் பெற்றுள்ளது.

உலகக்கோப்பையை கொடுத்து விட்டு டொனால்ட் டிரம்ப் செய்த செயல்.. ரசிகர்கள் விளாசல்.. இதே வேலையாப் போச்சு

உலகக்கோப்பையை கொடுத்து விட்டு டொனால்ட் டிரம்ப் செய்த செயல்.. ரசிகர்கள் விளாசல்.. இதே வேலையாப் போச்சு

ஸ்பெயின் அணி இந்த ஒரு இறுதிப் போட்டியில் மட்டும் ஆதிக்கம் செலுத்தவில்லை. கடந்த 38 போட்டிகளாக ஸ்பெயின் அணி ஒரு தோல்வி கூட சந்திக்கவில்லை. இதை அடுத்து தோல்வியே சந்திக்காமல் அதிக போட்டிகள் விளையாடிய அணி என்ற சாதனையையும் ஸ்பெயின் செய்துள்ளது.

உலகக் கோப்பை தோல்வி ஆத்திரம்.. ஸ்பெயின் வீரர் காவி முகத்தில் குத்திய அர்ஜென்டினாவின் பரேடெஸ்

உலகக் கோப்பை தோல்வி ஆத்திரம்.. ஸ்பெயின் வீரர் காவி முகத்தில் குத்திய அர்ஜென்டினாவின் பரேடெஸ்
Story first published: Monday, July 20, 2026, 9:03 [IST]
Other articles published on Jul 20, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+