For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஃபிபா உலகக் கோப்பை.... இன்றைய ஆட்டம் - ஸ்பெயினுடன் போர்ச்சுகல் மோதல்!

ஃபிபா உலகக் கோப்பை போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. இதில் பி பிரிவில் இன்று நடக்கும் ஆட்டத்தில் ஸ்பெயின், போர்ச்சுகல் மோதுகின்றன.

Recommended Video

ஃபிபா உலகக் கோப்பை....இன்றைய ஆட்டங்கள்- வீடியோ

சென்னை: 21வது ஃபிபா உலகக் கோப்பையில் பி பிரிவில் இன்று நடக்கும் ஆட்டத்தில் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் அணிகள் மோதுகின்றன.

21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது.

spain to face portugal in the Fifa world cup

இந்த உலகக் கோப்பைக்கான ஆட்டங்கள் துவங்கியுள்ளன. இன்று நடக்கும் ஆட்டத்தில் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் அணிகள் மோதுகின்றன.

பிரிவு பி
ஸ்பெயின் - போர்ச்சுகல்
போட்டி நடக்கும் நேரம் - இந்திய நேரப்படி இரவு 11.30 மணி

உலகக் கோப்பையில் இரு அணிகளும் 2010ல் மட்டுமே நேரடியாக மோதியுள்ளன. காலிறுதிக்கு முந்தையச் சுற்றில் 1-0 என ஸ்பெயின் அப்போது வென்றது.

யூரோ கோப்பையை வென்றதைத் தொடர்ந்து உலகக் கோப்பையை மேற்கு ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகியவை வென்றுள்ளன. 2016ல் யூரோ வென்ற போர்ச்சுகல் தற்போது உலகக் கோப்பையை வெல்லும் முயற்சியில் உள்ளது.

முக்கிய வீரர்கள்

போர்ச்சுகல் - உலகின் தலைச் சிறந்த வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளது அணிக்கு மிகப் பெரிய பலமாகும். ஆனால் ஸ்பெயினுக்கு எதிராக இதுவரை அவர் கோல் அடித்ததில்லை.

ஸ்பெயின் - ரொனால்டோவை கோலடிக்க விடாமல் தடுக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு உள்ளவர் செர்ஜியோ ராமோஸ்.

இந்த உலகக் கோப்பைக்கான பி பிரிவில் ஸ்பெயின், போர்ச்சுகல் அணிகளுடன் மொராக்கோ மற்றும் ஈரான் அணிகளும் உள்ளன. ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் அணிகளே அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், உலகக் கோப்பை துவங்குவதற்கு முதல் நாள், ஸ்பெயின் சிக்கலில் மாட்டிக் கொண்டது. அணியின் கோச்சாக இருந்த ஜூலென் லோபடேகய் நீக்கப்பட்டு புதிய கோச்சாக பெர்னான்டோ ரூயில் ஹியரோ நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தப் பிரச்னையில் இருந்து மீண்டு வரும் அளவுக்கு திறமையான வீரர்களை ஸ்பெயின் கொண்டுள்ளது. 2010 உலகக் கோப்பையை வென்ற ஸ்பெயின், கடந்த நான்கு உலகக் கோப்பைகளில் மூன்று முறை பிரிவு சுற்று ஆட்டங்களில் முதலிடத்தைப் பிடித்தது. ஆனால், இதுவரை விளையாடிய 12 முதல் சுற்று ஆட்டங்களில் 2ல் மட்டுமே வென்றுள்ளது. 3 டிரா, 7 தோல்விகளை கண்டுள்ளது.

இந்த உலகக் கோப்பையின் மிகவும் முக்கியமான ஆட்டங்களில் ஒன்றாக இந்த ஆட்டம் எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, June 15, 2018, 7:39 [IST]
Other articles published on Jun 15, 2018
English summary
Portugal to meet spain in the group b match in the fifa world cup.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+