For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தனியொருவனாக மெர்சல் ஆட்டம்... ரொனால்டோ ஹாட்ரிக்.... ஸ்பெயினுடன் டிரா!

ஃபிபா உலகக் கோப்பை போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. இதில் பி பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் ஸ்பெயின், போர்ச்சுகல் மோதின. இதில் 3- 3 என டிராவானது. ரொனால்டோ ஹாட்ரிக் கோலடித்தார்.

சென்னை: 21வது ஃபிபா உலகக் கோப்பையில் பி பிரிவில் இன்று நடந்த ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் 3-3 என டிராவானது. இதில் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஹாட்ரிக் கோலடித்து அசத்தினார்.

21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது.

spain and portugal match ended in draw in the Fifa world cup

இந்த உலகக் கோப்பைக்கான ஆட்டங்கள் துவங்கியுள்ளன. இன்று நடந்த பி பிரிவு ஆட்டத்தில் மொராக்கோ சேம் சைடு கோல் அடிக்க 1-0 என ஈரான் வென்றது. மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் அணிகள் மோதின
----
பிரிவு பி
ஸ்பெயின் - போர்ச்சுகல்
3 - 3
----
இந்த உலகக் கோப்பையின் மிகவும் முக்கியமான ஆட்டங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த ஆட்டத்தின் 4வது நிமிடம் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி போர்ச்சுகல்லின் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோலடித்தார்.

கோச் மாற்றப்பட்ட பிரச்னை எதுவும் தங்களை பாதிக்கவில்லை என்பது போல், ஸ்பெயின் வீரர்கள் விளையாடினர். 24வது நிமிடத்தில் டியாஜோ கோஸ்டா கோலடித்து சமநிலையை உருவாக்கினார்.

spain and portugal match ended in draw in the Fifa world cup

சபாஷ் சரியான போட்டி என்று சொல்லும் அளவுக்கு 44வது நிமிடத்தில் ரொனால்டோ மற்றொரு கோலை அடித்தார். 55வது நிமிடத்தில் கோஸ்டா மற்றொரு கோலடிக்க இரு அணிகளும் 2-2 என சம நிலையில் இருந்தன.

மிகச் சிறந்த ஒரு போட்டியைப் பார்த்த திருப்தியை ரசிகர்களுக்கு இரு அணி வீரர்களும் அளித்தனர். 58வது நிமிடத்தில் நாசோ கோலடிக்க ஸ்பெயின் 3-2 என முன்னிலை பெற்றது.

நேரம் செல்ல செல்ல, ரசிகர்களின் இதயத் துடிப்பு எகிறத் துவங்கியது. அடடா ரொனால்டோ தோற்று விடுவாரோ என்று குமுறினர். ஆட்டம் முடிய சில நிமிடங்களே இருக்கையில், 88வது நிமிடத்தில் ஹாட்ரிக் கோலடித்து சமநிலையை உருவாக்கினார் ரொனால்டோ.

இதன் மூலம் தனது கால்பந்து வாழ்க்கையில் 51வது முறையாக ஹாட்ரிக் கோலடித்து அசத்தினார் ரொனால்டோ. தோல்வியில் இருந்து போர்ச்சுகலை மீட்டார். இரு அணிகளும் தலா ஒரு புள்ளியைப் பெற்றன. இந்த உலகக் கோப்பையில் இதுவரை நடந்துள்ள நான்கு ஆட்டங்களில் முதல் டிரா இதுவே.

ஸ்பெயின் அணிக்கு எதிராக போர்ச்சுகல் என்ற அணி விளையாடவில்லை, ரொனால்டோ என்ற தனி மனிதர் விளையாடியது போலவே, இந்த ஆட்டத்தின் ஒவ்வொரு விநாடியிலும் ரொனால்டோவின் ஆதிக்கவே இருந்தது.

Story first published: Saturday, June 16, 2018, 8:45 [IST]
Other articles published on Jun 16, 2018
English summary
Portugal and spain match ended in draw. Ronaldo scored hattrick.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+