FIFA உலககோப்பையை ஸ்பெயின் வென்றதால் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு அடிக்க போகும் லக்.. விவரம்
நியூயார்க்: 2026 ஆம் ஆண்டு ஃபிபா உலகக் கோப்பையை ஸ்பெயின் அணி கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது. நியூயார்க் நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
ஸ்பெயின் அணியின் இந்த வெற்றியை இந்தியாவில் உள்ள அந்நாட்டு ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். கேரளாவில் உலகக்கோப்பை பைனல் ஒட்டி இன்று திங்கட்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த சூழலில் ஸ்பெயின் அணி உலக கோப்பையை வென்றதால் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் ஒன்று ஏற்பட்டிருப்பதாக சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கூறி வருகின்றனர். அது என்னவென்று தற்போது பார்க்கலாம். கால்பந்தை போலவே ஐசிசி 50 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான உலக கோப்பையும் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்.
இந்த சூழலில் 2010 ஆம் ஆண்டு ஃபிஃபா உலகக்கோப்பை தென்னாபிரிக்காவில் நடைபெற்றது. அதில் நெதர்லாந்தை பைனலில் வீழ்த்தி ஸ்பெயின் அணி முதல்முறையாக கோப்பை வென்றது. இந்த சம்பவம் நடந்த அடுத்த ஆண்டு 2011 ஆம் ஆண்டு ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.
அதன் பிறகு நடைபெற்ற எந்த ஒரு உலகக்கோப்பைகளும் ஸ்பெயின் அணி கால்பந்திலும், இந்தியா 50 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் சாம்பியன் பட்டத்தை வென்றது இல்லை. இந்த நிலையில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்பெயின் மீண்டும் உலகக் கோப்பை கால்பந்து தொடரை வென்று அசத்தியிருக்கிறது. எப்படி 2010 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு பிறகு 2011 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பை நடந்ததோ, அதேபோல் தற்போது 2027 ஆம் ஆண்டும் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்க இருக்கின்றது.
இதனை குறிப்பிட்டுள்ள ரசிகர்கள் ஸ்பெயின் வென்ற பிறகு இந்திய அணி கிரிக்கெட் உலக கோப்பையை 16 ஆண்டுகளுக்கு முன்பு வென்றதாகவும், தற்போது மீண்டும் அதே போல் ஸ்பெயின் அணி கால்பந்து உலக கோப்பையில் வென்றதால் அடுத்த ஆண்டு நடைபெறும் கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா வெல்லும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 2027 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தென்னாப்பிரிக்கா மண்ணில் உலகக் கோப்பை 50 ஓவர் போட்டி நடக்க இருக்கிறது. இது விராட் கோலி,ரோகித் சர்மா போன்ற வீரர்களுக்கு இறுதி கோப்பையாக இருக்கும்.


Click it and Unblock the Notifications

