Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஈரானை வென்றது ஸ்பெயின்.... அடுத்தச் சுற்று முன்னேற 3 அணிகள் இடையே கடும் போட்டி!

கசான்: 21வது ஃபிபா உலகக் கோப்பையில் பிரிவு சுற்று ஆட்டங்களில் அணிகளின் இரண்டாவது ஆட்டம் துவங்கியுள்ளது. இதில் பி பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் ஈரானை வென்றது ஸ்பெயின். அடுத்தச் சுற்றுக்கு முன்னேற மூன்று அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது. 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பையிலும் பங்கேற்கின்றன.

Iran-Spain

இந்த உலகக் கோப்பைக்கான போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற மூன்று அணிகளுடன் விளையாடும்.

அதன்படி ஒவ்வொரு அணியும் ஒரு ஆட்டத்தை விளையாடியுள்ளன. பி பிரிவில் இன்று நடந்த முதல் ஆட்டத்தில் போர்ச்சுகல் 1-0 என மொராக்கோவை வென்றது. இரவு நடந்த இரண்டாவது ஆட்டத்தில் ஸ்பெயின் 1-0 என ஈரானை வென்றது.
----
பிரிவு பி
ஸ்பெயின் - ஈரான்
1 - 0
----
பி பிரிவில் இதுவரை...

* ஈரான் 1-0 என மொராக்கோவை வென்றது
* போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் ஆட்டம் 3-3 என டிராவானது.
* போர்ச்சுகல் 1-0 என மொராக்கோவை வென்றது
* ஸ்பெயின் 1-0 என ஈரானை வென்றது.
பி பிரிவின் புள்ளிப் பட்டியலில் போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் தலா 4 புள்ளிகளுடன் உள்ளன. ஈரான் 3 புள்ளிகளுடன் உள்ளது. மொராக்கோ புள்ளி ஏதும் பெறாமல் வெளியேறியது.
-----
பி பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் மொராக்கோ மற்றும் ஈரான் மோதின. அந்த ஆட்டத்தில் மொராக்கோ அணியே அனைத்து விதத்திலும் ஈரானை விட முன்னிலையில் இருந்தது. டிராவில் முடியும் என்று நினைக்கப்பட்ட நிலையில், ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் மொராக்கோவின் போஹாதூஸ் சேம் சைட் கோலடிக்க, ஈரான் வென்றது. உலகக் கோப்பையில் ஈரானுக்கு கிடைத்த இரண்டாவது வெற்றி இதுவாகும்.

பி பிரிவில் நடந்த இரண்டாவது ஆட்டத்தில் ஸ்பெயினுடன் கிறிஸ்டியானோ ரொனால்டோ மோதினார் என்று கூறும் அளவுக்கு தனி ஆளாக போர்ச்சுகல் அணியை தூக்கிப் பிடித்தார் ரொனால்டோ. இந்த உலகக் கோப்பையின் மிகவும் முக்கியமான ஆட்டங்களில் ஒன்றாக கருதப்படும் அந்த ஆட்டத்தில் ரொனால்டோ ஹாட்ரிக் கோலடித்தார். ஸ்பெயினுடன் 3-3 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் டிரா செய்தது.

இந்த நிலையில், போர்ச்சுகல் மற்றும் மொராக்கோ அணிகள் தங்களுடைய இரண்டாவது ஆட்டத்தில் இன்று விளையாடின. இதிலும் ரொனால்டோ தனி ஆளாக அசத்தினார். ஆட்டத்தின் 4வது நிமிடத்திலேயே அற்புதமாக கோலடித்து, போர்ச்சுகல் அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். இதில் 1-0 என போர்ச்சுகல் வென்றது.

இந்த நிலையில் இன்று நடந்த பி பிரிவின் இரண்டாவது ஆட்டத்தில் ஸ்பெயினும் ஈரானும் மோதின. இதில் ஸ்பெயின் 1-0 என வென்றது. முதல் ஆட்டத்தில் கோலடித்த டியஜோ கோஸ்டா ஸ்பெயின் அணிக்காக இந்த ஆட்டத்தில் கோலடித்தார்.

அதையடுத்து பி பிரிவில் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் தலா 4 புள்ளிகளுடன் உள்ளன. ஈரான் 3 புள்ளிகளுடன் உள்ளது. அடுத்தச் சுற்றுக்கு முன்னேற இந்த மூன்று அணிகளுக்கும் இடையே கடும் போட்டி உள்ளது. இந்த நிலையில், இரண்டு தோல்விகளை சந்தித்த மொராக்கோ முதல் சுற்றுடன் வெளியேறுகிறது.

Story first published: Thursday, June 21, 2018, 9:47 [IST]
Other articles published on Jun 21, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+