Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா கூட இந்த பிரேசில் அணியை "ஈஸி"யாக ஜெயிக்கலாம் போலிருக்கே...!

பிரேசிலியா: நெய்மார் காயமடைந்து போனாலும் போனார், பிரேசில் அணி படு மோசமாக அடி மேல் அடியாக வாங்கி பார்க்கவே படு பரிதாபமான நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது. தற்போதைய நிலையில் உள்ள பிரேசில் அணியை, இந்தியா, இலங்கை, பர்மா, மலேசியா என எந்த நாடாக இருந்தாலும் எளிதாக தோற்கடித்து விடலாம் போலிருக்கிறது. அப்படி ஒரு நோஞ்சான்தனமான ஆட்டத்தை பிரேசில் ரசிகர்களை வெறுத்துப் போக வைத்து விட்டனர் பிரேசில் அணியினர்.

அரை இறுதியில் மகா மோசமான தோல்வியைத் தழுவிய பிரேசில் அணி, நேற்று நடந்த 3வது இடத்துக்கான போட்டியில் மறுபடியும் மகா கேவலமான தோல்வியைத் தழுவியுள்ளது நெதர்லாந்திடம். ஜெர்மனியுடன் நடந்த போட்டியிலாவது ஒரு கோல் போட்டனர். நெதர்லாந்துடனான போட்டியில் ஒரு கோலும் போடவில்லை. 3 - 0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து அபார வெற்றியைப் பெற்று 3வது இடத்தைப் பிடித்தது.

பிரேசில் அணி விளையாடிய விதம் அந்த நாட்டு ரசிகர்களை பெரும் கோபத்திலும், ஏமாற்றத்திலும், விரக்தியிலும் தள்ளியுள்ளது. 3வது இடமாவது கிடைக்குமே என்று ஆவலுடன் இருந்த அவர்களுக்கு அதுவும் கிடைக்காமல் போனது ஏமாற்றமாகப் போய் விட்டது.

ரொம்ப சோகமாக இருக்கிறது

ரொம்ப சோகமாக இருக்கிறது

48 வயதான பிரேசில் ரசிகர் ஆண்ட்ரே கோன்காவ்ஸ் கூறுகையில், மிகப் பெரிய சோகத்தில் உள்ளேன். ஐந்து போட்டிகளை நான் எனது குடும்பத்துடன் பார்த்து ரசித்தேன். பிரேசில் விளையாடிய விதம் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. அனைவரும் சோகமாக உள்ளனர். மைதானத்தைப் பார்த்தாலே தெரியும் என்றார்.

எத்தனை எதிர்பார்ப்புகள்.. எத்தனை ஆர்வம்

எத்தனை எதிர்பார்ப்புகள்.. எத்தனை ஆர்வம்

முன்னதாக பிரேசில் அரை இறுதிப் போட்டியில் ஆடுவதற்கு முன்பே ரசிகர்கள் பிரேசில் தலைநகரில் குவியத் தொடங்கி விட்டனர். விமானங்களில் டிக்கெட் இல்லை. ஹோட்டல்களில் அறைகள் காலி இல்லை. ஆனால் அத்தனை எதிர்பார்ப்பும், ஆர்வமும் தவிடு பொடியாகிப் போனது பிரேசிலின் சொதப்பலான ஆட்டத்தால்.

கதை சொல்லக் காத்திருந்தேனே...

கதை சொல்லக் காத்திருந்தேனே...

32 வயதான தியாகோ டி பாலா என்பவர் கூறுகையில், வந்தோம், போட்டோ எடுத்தோம், பேஸ்புக்கில் போட்டோம் என்பதற்காக நான் மெனக்கெட்டு இங்கு வரவில்லை. மாறாக, எனது பிள்ளைகளுக்கும், எனது பேரப் பிள்ளைகளுக்கும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தருணத்தில் நானும் இருந்தேன் என்று சொல்லிப் பெருமைப் பட்டுக் கொள்ளக் காத்திருந்தேன். ஆனால் எனது காத்திருப்பு கனவாகி வி்ட்டது என்றார் வேதனையுடன்.

டிக்கெட் வாங்க எப்படிக் கஷ்டப்பட்டார் பாருங்கள்

டிக்கெட் வாங்க எப்படிக் கஷ்டப்பட்டார் பாருங்கள்

இவரும் இவரது தங்கை கமிலாவும் டிக்கெட் வாங்கி கடுமையாகப் போராடியுள்ளனர். எங்கெல்லாமோ அழைந்துள்ளனர். கடைசியில் ஆன்லைன் மூலம் டிக்கெட் வாங்கியுள்ளனர். அதுவும் அதிகாலை 4 மணி முதலே கம்ப்யூட்டர் முன் காத்திருந்து பெற்றுள்ளனர். ஆனால் தற்போது இருவரும் வெறுத்துப் போயுள்ளனர். இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டை கையில் வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் அமைதியாக இருக்கிறார்களாம்.

துக்க நாள்

துக்க நாள்

28 வயதான நத்தாலியா டோலிடோ தனது கணவருடன் பெரும் சோகத்துடன் உள்ளனர். பிரேசில் ஆடிய போட்டிகளுக்கு இவர் கவர்ச்சிகரமான, விதம் விதமான, வண்ணமயமான மேக்கப்புடன் வருவாராம். தற்போது கருப்பு நிற உடைக்கு மாறி விட்டார். கேட்டால் துக்கம் என்கிறார் சோகத்துடன்.

பீர் விற்பனை குறைந்தது

பீர் விற்பனை குறைந்தது

பிரேசில் வெற்றிகரமாக விளையாடிய வரைக்கும் பீர் விற்பனை அமோகமாக இருந்ததாம். தற்போது பிரேசில் இல்லாமல் போனதால் ரசிகர்கள் பாதிப் பேர் ஊர்களுக்குத் திரும்ப ஆரம்பித்து விட்டனர். இதனால் பீர் விற்பனை வெகுவாக குறைந்து போய் விட்டதாம்.

பரவாயில்லை விடுங்கப்பா.. இப்படியும் சிலர்

பரவாயில்லை விடுங்கப்பா.. இப்படியும் சிலர்

அதேசமயம், பிரேசிலியர்கள் பலரும் இந்தத் தோல்விக்காக நாம் அழக் கூடாது,. அழகான கால்பந்து போட்டிய நாம் சிறப்பாக நடத்தியுள்ளோம். அதை நினைத்து மகிழ்வோம் என்று ஆறுதலாகவும் பேசுகிறார்கள். நமது அணியை நாம் விட்டுக் கொடுக்கக் கூடாது, கைவிடக் கூடாது. தொடர்ந்து ஆதரிப்போம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

அர்ஜென்டைனாவை விடாதீங்க

அர்ஜென்டைனாவை விடாதீங்க

இதற்கிடையே பலர் அர்ஜென்டைனா கோப்பையை வெல்ல ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேசமயம், சிலரோ அர்ஜென்டைனா நம்மை விட மோசமாக தோற்க வேண்டும் என்றும் ஆசைப்பட்டு வருகிறார்களாம். லோசி என்ற 67 வயதான பல் டாக்டர் ஒருவர் கூறுகையில், 8-1 என்ற கணக்கில் ஜெர்மனி இறுதிப் போட்டியில் வென்றால் சந்தோஷப்படுவேன். அது 9-1 என்று இருந்தால் இன்னும் ரொம்பச் சந்தோஷப்படுவேன் என்கிறார்.

என்னா ஒரு வில்லத்தனம் பாருங்க...!

Story first published: Sunday, July 13, 2014, 11:33 [IST]
Other articles published on Jul 13, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+