Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மெஸ்ஸி, ரோனால்டோ ஆகியோரை பின்னுக்கு தள்ளிய இனிஸ்டா சிறந்த கால்பந்துவீரராக தேர்வு

Andres Iniesta
மோனாகோ: ஐரோப்பாவில் இந்த ஆண்டின் சிறந்த வீரராக ஸ்பெயின் கால்பந்துவீரரான ஆன்ட்ரஸ் இனிஸ்டா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஸ்பெயின் கால்பந்து அணி வீரர் ஆன்ட்ரஸ் இனிஸ்டா(28). மிட்பில்டராக கால்பந்து ஆடுகளத்தில் செயல்படும் இவர், அணியின் வெற்றிக்கு பக்கப்பலமாக செயல்படுவார். இவர் இந்த ஆண்டு யூரோ கோப்பையின் தொடர் நாயகன் விருதை வென்றவர். கடந்த 2009ம் ஆண்டு முதல் பார்சிலோனா கிளப் அணிக்காக ஆடி வருகிறார்.

இந்த நிலையில் ஐரோப்பாவில் உள்ள கால்பந்து வீரர்களில் சிறந்த வீரரை தேர்வு செய்யும் போட்டி நடத்தப்பட்டது. இதற்காக ஐரோப்பிய கால்பந்து குழுமத்தில் இணைந்துள்ள 53 நாடுகளை சேர்ந்த கால்பந்து ரசிகர்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில் இனிஸ்டா அதிக வாக்குகளை பெற்று, ஐரோப்பாவின் சிறந்த கால்பந்து வீரர் விருதை தட்டி சென்றார். உலகின் சிறந்த கால்பந்து வீரர்களான ரோனால்டோ, மெஸ்ஸி ஆகியோரும் இந்த போட்டியில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து இனிஸ்டா கூறியதாவது,

ஸ்பெயின் மற்றும் பார்சிலோனா அணிகளில் உள்ள எனது சகவீரர்களின் உதவி இல்லாமல், இந்த தனிப்பட்ட விருதை என்னால் வென்றிருக்க முடியாது. ஸ்பெயின் கால்பந்து அணியில் நான் இடம் பெற்றிருப்பதை பெருமையாக கருதுகிறேன் என்றார்.

Story first published: Friday, August 31, 2012, 14:07 [IST]
Other articles published on Aug 31, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+