உலகக் கோப்பை கால்பந்து-அர்ஜென்டினா தகுதி

உலகக் கோப்பை கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கிபதி. கடைசியாக 2006ம் ஆண்டு ஜெர்மனியில் போட்டி நடந்தது. 2010ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடக்கிறது.
இதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் உலகின் பல்வேறு நாடுகளில் நடந்து வருகின்றன. தென் அமெரிக்க கண்டத்துக்கான தகுதிச் சுற்று ஆட்டம் உருகுவே நாட்டில் நடந்தது.
இதில் 2 முறை சாம்பியனான அர்ஜென்டினா- உருகுவே அணிகள் மோதின. இதில் வெற்றி பெற்றால் தான் உலகக் கோப்பைக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் அர்ஜென்டினா மோதியது.
கடுமையாக நடந்த இந்தப் போட்டியில் அர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் உருகுவேயை வென்று உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது. மரியோபோலாட்டி இந்த கோலை போட்டார்.
இதன்மூலம் தென் அமெரிக்க கண்டத்தைச் சேர்ந்த பிரேசில், சிலி, பராகுவே, அர்ஜென்டினா ஆகியவை உலகக் கோப்பை போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளன.
இதுவரை உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நாடுகள் விவரம்:
வட கொரியா, ஜப்பான், சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, இத்தாலி, செர்பியா, ஸ்பெயின், ஐவரிகோஸ்ட், ஆஸ்திரேலியா, தென் கொரியா, டென்மார்க், ஜெர்மனி, ஹாலந்து, ஸ்லோவாக்கியா, மெக்சிகோ, அமெரிக்கா, பிரேசில், சிலி, அர்ஜென்டினா, பராகுவே.
போட்டியை நடத்தும் தென் ஆப்பிரிக்கா நேரடியாகவே தகுதி பெற்றுவிட்டது குறிப்பிடத்தத்தது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:32 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications