ஒலிம்பிக் கால்பந்து: அர்ஜென்டினாவுக்கு தங்கம்
பெய்ஜிங்: ஒலிம்பிக் கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா மீண்டும் சாம்பியன் ஆகி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.
ஒலிம்பிக் கால்பந்து இறுதிப் போட்டியில், இன்று அர்ஜென்டினாவும், நைஜீரியாவும் மோதின. விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டியில் இரு அணிகளும் கோல் போட முடியாமல்திணறின.
இந்த நிலையில் அர்ஜென்டினா கடைசி நேரத்தில் ஒரு கோல் போட்டு அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா அந்தப் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டது. நைஜீரியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் பிரேசிலும், பெல்ஜியமும் நேற்று மோதின. இதில் பிரேசில் வெற்றி பெற்று, வெண்கலப் பதக்கத்தை வென்றது.
Story first published: Wednesday, December 7, 2011, 17:16 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications