For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

யூரோ கோப்பை கால்பந்து அரை இறுதி: ஜெர்மனியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு போனது இத்தாலி

By Mathi
வார்சா:14-வது யூரோ கோப்பை கால்பந்து அரை இறுதிப் போட்டியில் முன்னாள் சாம்பியன்களாக ஜெர்மன் அணியும் இத்தாலியும் சமபலத்துடன் மோதின. இத்தாலியின் பலோடெலி அபாரமாக ஆடி ஜெர்மனியை வீழ்த்தி இத்தாலியை இறுதிப் போட்டிக்கு கொண்டு சென்றார்.

நடப்புத் தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் போர்ச்சுகலை வீழ்த்தி ஸ்பெயின் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 2-வது அரை இறுதிப் போட்டியில் ஜெர்மனியும் இத்தாலியும் மோதின.

ஆட்டத்தின் 20-வது நிமிடத்தில் கசானோ கடத்தி கொடுத்த பந்தை தலையால் முட்டி பலோடெலி அற்புதமான கோல் அடித்தார். அடுத்த அதிரடியாக 36-வது நிமிடத்தில் பலோடெலி தனி மனிதராக வெகுதொலைவில் இருந்து பந்தை கடத்தி கொண்டுவந்து செம கோல் அடித்தார்.

ஜெர்மனி அணியினரும் சளைக்காமல் ஆடினர். அந்த அணியின் மரியோ கோமெஸ் முனைப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் முதல் பாதியில் எந்த கோலும் அடிக்கவில்லை. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் கோலடித்தாக வேண்டிய நெருக்கடியில் ஜெர்மனி மும்முரம் காட்டியது. ஆனால் ஜெர்மனியின் முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஆட்டத்தின் 66-வது நிமிடத்தில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இத்தாலியின் நட்சத்திர வீரர் பலோடெலி வெளியேறினார். அவருக்கு பதிலாக மாற்று வீரராக டி நடாலி களம் புகுந்தார். விறுவிறுப்பாக ஆடிய இரு அணி வீரர்களும், கோல் அடிக்காமல் போயினர். 90-வது நிமிடத்தில் ஜெர்மனியின் ஓசில் தனக்கு கிடத்த பெனால்டி கிக் வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தார். இருப்பினும் ஆட்டத்தின் இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி இத்தாலி அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. ஞாயிற்றுக்கிழமை நடக்கும் இறுதிப்போட்டியில் இத்தாலி அணி, ஸ்பெயினை எதிர்த்து விளையாடுகிறது.

Story first published: Friday, June 29, 2012, 10:29 [IST]
Other articles published on Jun 29, 2012
English summary
A brilliant performance from Mario Balotelli has driven Italy into the Euro 2012 final, after a 2-1 win over Germany at the National Stadium in Warsaw on Thursday.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+