Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யூரோ கோப்பை கால்பந்து : சமவலுவான ரஷ்யாவை பரபரப்பான ஆட்டத்தில் வீழ்த்தி கால் இறுதிக்குப் போனது

Euro Cup 2012
வார்சாவ்: 14-வது யூரோ கோப்பை கால்பந்து தொடரில் சமமான ரஷ்ய அணியை பரபரப்பான ஆட்டத்தில் வீழ்த்திய கிரீஸ் அணி கால் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் 2004-ம் ஆண்டில் சாம்பியன் பட்டம் பெற்ற அணி கிரீஸ். நடப்பு தொடரில் முதல் போட்டியில் செக் குடியரசுக்கு எதிராக 4 கோல்களைப் போட்டு அதிரடியைக் கிளப்பியிருந்தது ரஷ்யா.

இரண்டு அணிகளுக்கும் முக்கியமான போட்டி என்பதால் ஆட்டம் படுவிறுவிறுப்பாக இருந்தது. இரண்டு அணிகளுமே பலமுறை கோல் அடிக்க முயற்சித்தன. ஆட்டத்தில் முதல் பாதி முடிவடையும் நேரத்தில் கிரீஸ் அணி ஒரு கோல் அடித்தது. இரண்டாவது பாதி முழுவதுமே இரண்டு அணி வீரர்களுமே பலமுறை கோல் அடிக்க முயன்றும் பயன் கிடைக்கவில்லை. ரஷ்ய அணியானது 25 முறை கோலடிக்க முயன்றும் ஒரு கோல் கூட போடவில்லை. ஆனால் கிரீஸ் அணியோ 5 முறைதான் கோலடிக்க முயன்று அதில் ஒன்றை கோலாக்கியும் காட்டியது.கிரீஸ் அணிக்கு 5 கார்னர் வாய்ப்புகளும் ரஷ்ய அணிக்கு 12 கார்னர் வாய்ப்புகளும் கிடைத்திருந்தன.

கடைசியாக ரஷ்யா கோல் அடிக்காத நிலையில் கிரீஸ் வென்றது. ரஷ்யாவை வீழ்த்தியதன் மூலம் கால் இறுதிக்குப் போட்டிக்கு முன்னேறிவிட்டது முன்னாள் சாம்பியன் கிரீஸ்!

Story first published: Sunday, June 17, 2012, 9:41 [IST]
Other articles published on Jun 17, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+