For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

யூரோ கோப்பை கால்பந்து : விறுவிறுப்பான போட்டியில் ஸ்வீடனை வீழ்த்தி அசத்தியது உக்ரைன்

By Mathi

கிவ்: 14-வது யூரோ கோப்பை கால்பந்து தொடரின் லீக் ஆட்டத்தில் ஸ்வீடனை 2-1 என்ற கோல் கணக்கில் உக்ரைன் வீழ்த்தியுள்ளது.

யூரோ கோப்பை கால்பந்து போட்டிகளை போலந்தும், உக்ரைனும் இணைந்து நடத்துகின்ற. இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

உக்ரைன் நாட்டின் கிவ் கால்பந்து மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் உக்ரைனும் ஸ்வீடனும் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் இரண்டு அணி வீரர்களும் கோல் அடிக்க படாதபாடு பட்டனர். ஆனால் அவர்களின் முயற்சி தோல்வியிலேயே முடிந்தது.

ஆட்டத்தின் 2-வது பாதியில் உக்ரைன் அணி வீரர் ஷெவ்சென்கோ அதிரடியாக 2 கோல்களை போட்டு அசத்தினார். ஸ்வீடன் அணியோ ஒரே ஒரு கோல்தான் அடித்தது. கடைசிவரை போராடிய ஸ்வீடனின் முயற்சி பலனளிக்கவில்லை.

இதனால் உக்ரைன் அணி 2-1 என்ற கோல்கணக்கில் வென்றது. நடப்பு யூரோ கால்பந்து தொடரில் டி பிரிவில் உக்ரைன் அணி முதலிடத்தைப் பெற்றுள்ளது.

கடந்த வாரம் புட் பாய்சனால் பாதிக்கப்பட்ட உக்ரைன் வீரர்கள் சொதப்பிவிடுவார்களோ என்றும் கூறப்பட்டு வந்தது. ஆனால் அதை பொய்யாக்கிவிட்டனர்.

Story first published: Tuesday, June 12, 2012, 8:42 [IST]
Other articles published on Jun 12, 2012
English summary
Andriy Shevchenko notched a superb quick-fire double to fire Euro 2012 co-hosts Ukraine to a 2-1 victory over Sweden in Kiev on Monday.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+