யூரோ கோப்பை கால்பந்து: அயர்லாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது இத்தாலி அணி

அயர்லாந்து அணியானது ஏற்கெனவே தொடரிலிருந்து வெளியேறிய அணி. இத்தாலியோ அயர்லாந்தை வீழ்த்தினால்தான் கால் இறுதிப் போட்டிக்கு நுழைய முடியும் என்கிற நிலையில் ஆட்டத்தை எதிர்கொண்டது.
தொடரிலிருந்து வெளியேறிவிட்டதால் ஆறுதல் வெற்றிபெறும் முனைப்பில் களமிறங்கியது.
ஆட்டத்தின் முதல் பாதியில் 35-வது நிமிடத்தில் இத்தாலி வீரர் கசானோ முதல் கோல் அடித்தார். இதற்கு பதில் கோல் அடிக்க முடியாமல் அயர்லாந்து அணியின் தவித்தனர். இந்த தவிப்புக்கு பலன் கிடைக்கவில்லை.
இரண்டாவது பாதியில் கடைசி நேரத்தில் இத்தாலியின் பாலோடெலி அதிரடி கோல் ஒன்றை அடித்தார். அயர்லாந்தால் கோல் எதுவுமே அடிக்க முடியவில்லை. இதனால் 2-0 என்ற கோல் கணக்கில் இத்தாலி வென்று கால் இறுதிக்குள் நுழைந்துவிட்டது. சி பிரிவில் கடைசி இடத்துக்குப் போயிருக்கும் அயர்லாந்து தொடரில் இருந்து வெளியேறிவிட்டது.
Story first published: Tuesday, June 19, 2012, 10:06 [IST]
Other articles published on Jun 19, 2012


Click it and Unblock the Notifications