Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யூரோ கோப்பை: மாண்ட்சுகிக் அதிரடியில் குரோஷியா 3-1 கோல் கணக்கில் அபார வெற்றி!

Croatia win against Ireland
போஸ்னன்: யூரோ கோப்பை கால்பந்து தொடரின் நேற்றைய போட்டியில் அயர்லாந்தை 3-1 என்ற கோல் கணக்கில் குரோஷியா வீழ்த்தியது. குரோஷியாவின் மாண்ட்சுகிக் 2 கோல்களை அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

ஐரோப்பா நாடுகள் பங்கேற்கும் யூரோ கோப்பை 2012 கால்பந்து தொடர், உக்ரைன் மற்றும் போலந்து நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் 'குரூப் சி'யை சேர்ந்த குரோஷியா, அயர்லாந்து அணிகள் மோதின.

போட்டியின் முதல் பாதியில் சிறப்பாக ஆடிய குரோஷிய வீரர்கள் 2 கோல்களை அடித்தனர். அதற்கு பதிலாக அயர்லாந்து அணியினர் ஒரு கோல் மட்டுமே அடிக்க முடிந்தது. போட்டி துவங்கிய 3வது நிமிடத்தில் குரோஷியா கேப்டன் டரிஜோ ஸ்ர்னா கொடுத்த பாஸை சிறப்பாக தலையில் ஹெட் செய்த மரியோ மாண்ட்சுகிக் முதல் கோலை அடித்தார்.

இதற்கு பதிலடியாக 19வது நிமிடத்தில் அயர்லாந்தின் சியன் செயின்ட் லிட்ஜர் ஒரு கோலை அடித்து அசத்தினார். ஆனால் 43வது நிமிடத்தில் குரோஷியாவின் நிக்கா ஜிலாவிக் ஒரு கோலும், 48வது நிமிடத்தில் மரியோ மாண்டசுகிக் ஒரு கோலும் அடித்தனர்.

அதன்பிறகு அயர்லாந்து பலமுறை கோல் அடிக்க முயன்றும் தோல்வியடைந்தது. இதனால் போட்டியின் முடிவில் குரோஷியா 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்றது. போட்டியில் 2 கோல்களை அடித்த மரியோ மாண்டசுகிக் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Story first published: Monday, June 11, 2012, 13:03 [IST]
Other articles published on Jun 11, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+