Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யாருக்கு யூரோ கோப்பை... இன்று இறுதி.. வரலாறு படைக்க போராடும் ஸ்பெயின்-இத்தாலி!

கீவ்: நடப்பு யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிச்சுற்றில் சாம்பியனான ஸ்பெயின் அணியும் இத்தாலி அணியும் இன்று மோதும் ஆட்டம் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்பது நிச்சயம்.

ஸ்பெயின் அணிக்கு கேப்டனும், கோல் கீப்பருமான இகர் காஸில்ஸல் அந்த அணிக்கு மிகப்பெரிய பலம். நடப்பு யூரோ கோப்பை தொடரில் இதுவரை அவர் ஒரு கோல் மட்டுமே வாங்கியிருக்கிறார். அவரைத் தாண்டி கோலடிப்பது என்பது எதிரணியான இத்தாலிக்கு கடும் சவாலாகவே இருக்கும். ஸ்பெயின் அணியில் அலோன்ஸயூ, செர்ஜிகோ ரேமோஸ், பேப்ரிகஸ், பெர்னாண்டோ டோரஸ், ஜோர்டி ஆல்பா, ஆன்ட்ரேஸ் இனியெஸ்டா ஆகியோர் மிகவும் பலமானவர்களாக இருக்கின்றனர்.

இத்தொடரில் இத்தாலி அணி தொடக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கவில்லை. 1982, 2006-ம் ஆண்டுகளில் உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக இத்தாலி அணி மீது மேட்ச் பிக்ஸிங் புகார் எழுந்தது. ஆனால் அந்த இருமுறையும் இத்தாலி சாம்பியன் பட்டம் வென்றது. அதேபோன்று இந்த முறையும் மேட்ச் பிக்ஸிங் புகார் எழுந்தது. அதனால் இந்த முறையும் இத்தாலி சாம்பியன் பட்டம் வெல்லும் என இத்தாலி ரசிகர்கள் நம்புகின்றனர்.

இத்தாலி அணியின் மிகப்பெரிய பலமாகத் திகழ்கிறார் மரியோ பலோடெல்லி. தொடர்ச்சியாக தலையால் முட்டி கோலடித்து வருகிறார். அவர் ஸ்பெயின் வீரர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்வார்

நடப்பு 14-வது யூரோ கோப்பை கால்பந்து தொடரை போலந்தும் உக்ரைனும் இணைந்து நடத்துகின்றன. இந்தத் தொடரில் ஸ்பெயின், இத்தாலி அணிகள் சி பிரிவில் இடம்பெற்றிருந்தன. லீக் சுற்றில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. இதுவரை இவ்விரு அணிகளும் 31 முறை சர்வதேச போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இத்தாலி 10 முறையும், ஸ்பெயின் 8 முறையும் வெற்றி கண்டுள்ளன.

1968-ம் ஆண்டு யூரோ கோப்பையை வென்ற இத்தாலி, 2000-ம் ஆண்டில் இறுதிச்சுற்றில் பிரான்ஸிடம் தோற்று, கோப்பையை இழந்தது. கடந்த ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஜெர்மனியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியிருப்பதால் இத்தாலி மிகுந்த நம்பிக்கையோடு இந்த ஆட்டத்தில் களம் காண்கிறது.

உலக சாம்பியனும், யூரோவின் நடப்புச் சாம்பியனுமான ஸ்பெயின், இந்த ஆட்டத்தில் இத்தாலியை வீழ்த்தி கால்பந்து வரலாற்றில் தொடர்ந்து 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற முதல் அணி என்ற சாதனையை படைக்கலாம்.

Story first published: Sunday, July 1, 2012, 12:04 [IST]
Other articles published on Jul 1, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+