For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

யூரோ கோப்பை: போலந்து, கீரிஸ் அணிகள் மோதிய முதல் போட்டி 'டிரா'!

By

வார்சா: யூரோ கோப்பையின் முதல் போட்டியில் போலந்து, உக்ரைன் அணிகள் ஆக்ரோஷமாக மோதி கொண்டன. ஆனால் இறுதியில் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்து 1-1 கோல்களுடன் போட்டி டிராவில் முடிந்தது.

ஐரோப்பிய நாடுகள் கலந்து கொள்ளும் யூரோ கோப்பை கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. நேற்று தொடங்கிய யூரோ கோப்பை 2012 தொடரை போலந்து மற்றும் உக்ரைன் நாடுகள் இணைந்து நடத்துகின்றன. 16 அணிகள் பங்கேற்கும் இந்த கால்பந்து தொடரின் துவக்க விழா நேற்று நடைபெற்றது.

போலந்தின் வார்சா கால்பந்து மைதானத்தில் நேற்று கோலாகலமாக துவக்க விழாவுடன் தொடர் துவங்கியது. துவக்க நாளிலேயே 'குரூப் ஏ'வை சேர்ந்த போலந்து, கீரிஸ் அணிகள் மோதின.

உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களமிறங்கிய போலந்து அணி போட்டி துவங்கிய 17வது நிமிடத்தில் கேப்டன் ஜேகுப் பிளஸ்சிஸ்கோவ்ஸ்கி அடித்து கொடுத்த பந்தை, முன்பகுதியில் நின்ற ராபர்ட் லெவான்டவ்ஸ்கி தலையால் தட்டி விட முதல் கோலை அடித்தது.

அதன்பிறகு நீண்டநேரம் போராடிய கிரீஸ் அணிக்கு 51வது நிமிடத்தில் தான் கோல் அடித்தது. இதன் இடையே கிரீஸ் வீரர் பபஸ்தாதேபுலாஸ், எதிரணி வீரரை தள்ளிவிட்டதற்காக ரெட் கார்டு காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

அதன்பிறகு வெற்றிப் பெற இரு அணிகளும் அக்ரோஷமாக விளையாடின. இந்த நிலையில் 69 நிமிடத்தில் போலந்து கோல் கீப்பர் சிஸ்ஜெனிக்கு ரெட் கார்டு காட்டி வெளியேற்றப்பட்டார். இதனால் இரு அணிகளும் 10 வீரர்களுடன் தொடர்ந்து போராடின.

இரு அணிகளும் கடைசி வரை போராடியும் 2வது கோல் அடிக்க முடியவில்லை. இதனால் போட்டியின் இறுதியில் 1-1 என்ற கோல் கணக்கில் போட்டி டிராவில் முடிந்தது.

Story first published: Saturday, June 9, 2012, 11:35 [IST]
Other articles published on Jun 9, 2012
English summary
The first match of Euro cup 2012 has ended as draw after Poland and Greece struggled to get the 2nd goal. Each team earned 1 goal each.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+