Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யூரோ கோப்பை அரையிறுதி: இன்று இத்தாலியை வீழ்த்துமா ஜெர்மனி?

Euro Cup 2012
வார்ஷா: யூரோ கோப்பை 2012 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று இரவு நடைபெற உள்ள அரையிறுதி போட்டியில் பலமிக்க ஜெர்மனி, இத்தாலி அணிகள் மோத உள்ளன. இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால், இன்றைய போட்டி விறுவிறுப்பு மிகுந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3 முறை யூரோ கோப்பையை கைப்பற்றி உள்ள ஜெர்மனி, இத்தாலிக்கு எதிரான இன்றைய போட்டியில் இளம் அணியாக களமிறங்குகிறது. இத்தாலிக்கு எதிராக நேரடி தடுப்பு ஆட்டத்தை வெளிப்படுத்த ஜெர்மனி திட்டமிட்டுள்ளது.

இத்தாலி அணியை பொறுத்த வரை மிட் பில்டில் களமிறங்கும் ஆண்ட்ரியா பிர்லோ முக்கிய தடுப்பு வீரராக செயல்பட உள்ளார்.

ஜெர்மனியில் உள்ள மிசூட் ஓசில், பெனால்டி பகுதியில் சிறப்பாக ஆடக் கூடியவர். அவருடன் மார்கோ ரியஸ், ஆண்ட்ரி ஆகியோர் ஜோடி சேர்ந்தால், இத்தாலியின் தோல்வியை தவிர்க்க முடியாது.

மிட்டில் பில்டராக களமிறங்கும் பாஸ்டியன் காயத்தில் இருந்து மீண்டுள்ளார். ஆனால் ஜோரோம் போட்டிங், மரியோ கோமிஸ் ஆகியோருக்கு பதிலாக இன்று லார்ஸ் பென்டர், மிர்ரோஸ்லாவ் க்ளோஸ் ஆகியோர் களமிறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடிய இத்தாலிய வீரர் டேனியலி டி ரோஸி காயம் காரணமாக இன்று களமிறங்குவதில் சிக்கல் உள்ளது.

ஜெர்மனி வரிசை: நியூர், போட்டிங், ஹூமில்ஸ், பேட்ஸ்டுபர், லாம், கிதிரா, ஸ்வின்ஸ்டின்சர், ரியஸ், ஓசில், போடோல்ஸ்கி, கெளஸ்சி

இத்தாலி வரிசை: பூபன், அபேட், பார்சாகிலி, போனுச்சி, பால்சரிட்டி, மார்ச்சியோ, பிர்லோ, நோரினோ, மோட்டா, பாலோடில்லி, காசானோ.

இறுதிப் போட்டிக்கு முன்னேற இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால், இன்றைய போட்டியில் விறுவிறுப்பிற்கு குறைவிருக்காது.

Story first published: Friday, June 29, 2012, 9:31 [IST]
Other articles published on Jun 29, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+