For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

கால்பந்து ரசிகர்களை குஷிப்படுத்த நாளை முதல் யூரோ கோப்பை கால்பந்து போட்டி துவக்கம்!

By
Euro Cup
வார்சா: உலகில் உள்ள கால்பந்து ரசிகர்களின் விறுவிறுப்பை அதிகரிக்கும், யூரோ கோப்பை கால்பந்து போட்டி நாளை முதல் துவங்குகிறது. இதில் ஸ்பெயின், ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட பல முன்னணி கால்பந்து அணிகள் கோப்பையை தட்டி செல்ல காத்திருக்கின்றன.

ஐரோப்பிய நாடுகள் மட்டுமே கலந்து கொள்ளும் யூரோ கோப்பை கால்பந்து போட்டி, கால்பந்து ரசிகர்கள் இடையே அதிக எதிர்பார்ப்பை கொண்டது. நாளை முதல் துவங்கும் 14வது யூரோ கோப்பைக்கான கால்பந்து தொடரை போலாந்து மற்றும் உக்ரைன் நாடுகள் சேர்ந்து நடத்துகின்றன. இதில் கலந்து கொள்ள உள்ள 16 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

'குரூப் ஏ' பிரிவில் ரஷ்யா, போலாந்து, செக் குடியரசு, கிரீஸ் ஆகிய 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. 'குரூப் பி' பிரிவில் ஜெர்மனி, நெதர்லாந்து, டென்மார்க், போர்ச்சுக்கல் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. 'குரூப் சி' பிரிவில் ஸ்பெயின், குரோயடியா, இத்தாலி, அயர்லாந்து ஆகிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. 'குரூப் டி' பிரிவில் பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்வீடன், உக்ரைன் அணிகள் உள்ளன.

இதில் நடப்பு சாம்பியனாக ஸ்பெயின் களமிறங்க உள்ளது. ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, பிரான்ஸ் ஆகிய அணிகளும் சாம்பியனாக துடிக்கின்றன. இந்த நிலையில் யூரோ கோப்பையின் முதல் போட்டி நாளை வார்சா மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் 'குரூப் ஏ' பிரிவில் உள்ள போலாந்து, கீரிஸ் அணிகள் மோத உள்ளன. சொந்த மண்ணில் களமிறங்கும் போலந்து, நாளைய போட்டியில் வெற்றியுடன் துவங்க வேண்டும் என்ற ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

3 முறை உலக கோப்பை மற்றும் நடப்பு யூரோ கோப்பை சாம்பியனாகி உள்ள ஜெர்மனி, மீண்டும் யூரோ கோப்பையை கைப்பற்றும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Story first published: Friday, June 8, 2012, 17:33 [IST]
Other articles published on Jun 8, 2012
English summary
Spain starts Euro 2012 as defending European and World Cup champions, so it has to carry the favorites tag into Poland and Ukraine. But, its pursuit of a unprecedented third straight major title is under threat.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+