Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யூரோ கோப்பை: நடப்பு சாம்பியன் ஸ்பெயின் இன்று முதல் வெற்றியை பதிவு செய்யுமா?

Euro Cup 2012
ஜிடன்ஸ்க்: யூரோ கோப்பை கால்பந்து தொடரின் விறுவிறுப்பான இன்றைய 2வது போட்டியில் நடப்பு சாம்பியனான ஸ்பெயின், அயர்லாந்தை எதிர்கொள்ள உள்ளது. இத்தாலிக்கு எதிரான முதல் போட்டி டிராவில் முடிந்ததால், இன்றைய போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்ய ஸ்பெயின் கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய நாடுகளின் 16 அணிகள் மோதும் 14வது யூரோ கோப்பை கால்பந்து தொடர், போலந்து மற்றும் உக்ரைன் நாடுகளில் நடைபெறுகிறது. இதில் 'குரூப் சி'யை சேர்ந்த நடப்பு சாம்பியன் ஸ்பெயின், அயர்லாந்து அணியை இன்று எதிர்கொள்கிறது.

இத்தாலிக்கு எதிரான முதல் போட்டியில் ஸ்பெயின் வெற்றிப் பெற கடிமையாக போராடியும், 1-1 என்ற கோல் கணக்கில் போட்டி டிராவில் முடிந்தது. இதனால் இன்றைய போட்டியில் தனது முதல் வெற்றியை பதிவு செய்ய ஸ்பெயின் கடிமையாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அயர்லாந்து அணி தனது முதல் போட்டியில் குரோஷியாவிடம் தோல்வியை தழுவியது. இதனால் இன்று அயர்லாந்து வெற்றிப் பெற்றால் மட்டுமே காலிறுதிக்கு செல்வது குறித்து யோசிக்கவே முடியும்.

ஸ்பெயின் அணியின் முக்கிய வீரர்களான பேப்ரிகாஸ், கேப்டன் இகர் கேசில்லாஸ், ராமோஸ் ஆகியோர் இன்று சிறப்பாக ஆடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஸ்பெயின் அணியில் நட்சத்திர வீரர் டேவிட் வில்லா இல்லாதது பின்னடைவாக கருதப்படுகிறது.

அயர்லாந்து அணியை பொறுத்த வரை கேப்டன் ராபி கீன், ஷே கிவன், எய்டன் மெக்கேடி, ஸ்டீபன் வார்டு, ஜேம்ஸ் மெக்கிளீன் உள்ளிட்ட சிறந்த வீரர்கள் உள்ளனர். ஆனால் முதல் போட்டியில் தோல்வி அடைந்தது அயர்லாந்து வீரர்களுக்கு அதிக மனஅழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

யூரோ கோப்பை தொடரில் இதுவரை மேற்கண்ட இரு அணிகளும் 12 முறை மோதி உள்ளன. இதில் ஸ்பெயின் 8 முறை வெற்றிப் பெற்றுள்ளது. எனவே இன்றைய போட்டிலும் ஸ்பெயின் வெற்றிப் பெறுவதற்கே அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

Story first published: Thursday, June 14, 2012, 12:52 [IST]
Other articles published on Jun 14, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+