Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யூரோ கோப்பை: கடைசி வரை போராடியும் ஜெர்மனியிடம் வீழ்ந்தது போர்ச்சுகல்!

Germany
லிவிவ்: யூரோ கோப்பையின் பரபரப்பான போட்டியில் போர்ச்சுகல் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி வீழ்த்தியது. இதன் மூலம் யூரோ கோப்பை தொடரில் ஜெர்மனி வெற்றி துவக்கத்தை பெற்றுள்ளது. மற்றொரு போட்டியில் நெதர்லாந்து அணியை டென்மார்க் வீழ்த்தியது.

ஐரோப்பிய நாடுகள் பங்கேற்கும் யூரோ கோப்பை கால்பந்து போட்டியில், உக்ரைன் மற்றும் போலந்து நாடுகளில் நடைபெற்று வருகிறது. நேற்று அதிகாலையில் உக்ரைனில் உள்ள லிவிவ் நகரில் 'குரூப் பி' பிரிவை சேர்ந்த போர்ச்சுகல், ஜெர்மனி அணிகள் மோதி கொண்டன. பரபரப்பான ஆட்டத்தில், துவக்கம் முதலே இரு அணிகளும் ஆக்ரோஷமாக ஆடின.

போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்ட போதும், அவரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவி்ல்லை. போட்டியின் முதல் பாதி முடியும் தருவாயில், போர்ச்சுகல் வீரர் பெப்பே அடித்த பந்து, கோல் கம்பத்தில் பட்டு தவறியது. ஆனால் பந்து கோல் லைனில் பட்டதாக போர்ச்சுகல் வீரர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் போட்டியின் அம்பயர் அதை கோலாக அங்கீகரிக்க மறுத்துவிட்டார்.

இந்த நிலையில் 2வது பாதியில் இரு அணிகளின் கோல் தாகம் தொடர்ந்தது. 72வது நிமிடத்தில் ஜெர்மனிக்கு கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஜெர்மனி வீரர் சமி கெதிரா பந்தை சிறப்பாக நகர்த்தி சென்று மரியோ கோம்ப்ஸூக்கு நேராக கொடுக்க, அவர் அதை ஹெட் செய்து கோல் அடித்தார்.

இதன்பிறகு இரு அணிகளும் கோலடிக்க பல முறை முயன்றும் இறுதி வரை முடியவில்லை. போட்டியின் முடிவில் ஜெர்மனி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்றது. இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் டென்மார்க், நெதர்லாந்து அணிகள் மோதின. இதில் டென்மார்க் 1-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து அணியை வீழ்த்தியது.

Story first published: Monday, June 11, 2012, 10:45 [IST]
Other articles published on Jun 11, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+