Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யூரோ கோப்பை: பலமிக்க இங்கிலாந்தை இன்று எதிர்கொள்கிறது பிரான்ஸ்

டொனட்ஸ்க்: யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய போட்டியில் பலமிக்க இங்கிலாந்து அணியை, பிரான்ஸ் எதிர்கொள்கிறது. இதன்மூலம் இங்கிலாந்து யூரோ கோப்பை தொடரை வெற்றியுடன் துவக்கமா என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த 16 அணிகள் பங்கேற்கும் 14வது யூரோ கோப்பை தொடர், போலந்து மற்றும் உக்ரைன் நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று 'குரூப் டி'யை சேர்ந்த இங்கிலாந்து, பிரான்ஸ் அணிகள் இன்று உக்ரைனில் உள்ள டொனட்ஸ்க்கில் மோதி கொள்ள உள்ளன.

உலக கால்பந்து ரேங்கிங்கில் இங்கிலாந்து 6வது இடத்திலும், பிரான்ஸ் 14வது இடத்திலும் உள்ளது. இதனால் இன்றைய போட்டியில் இங்கிலாந்து சிறப்பாக ஆடி வெற்றிப் பெறும் என்ற கால்பந்து ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இங்கிலாந்து அணியை பொறுத்த வரை ஆன்டி கார்ரோல், டேனி வெல்பேக், ஆஷ்லே கோலே, ஜேம்ஸ் மில்னர், ஜான்சன், பார்கர் ஆகிய வீரர்கள் நட்சத்திர வீரர்கள் உள்ளனர். இவர்களுடன் காயத்தில் இருந்து மீண்டுள்ள ஜான் டெர்ரி இணைந்திருப்பது அணிக்கு கூடுதல் பலம். மேலும் இளம் வீரர் ஆஸ்லே யங் அணியில் வாய்ப்பு பெற்றுள்ளார்.

பிரான்ஸ் அணி வீரர்கள் இடையே காயம் காரணமாக பலம் இழந்த நிலையில் உள்ளது. யான் மிவில்லாவிற்கு தொடையில் காயம் ஏற்பட்டு, அவர் போட்டிகளில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனால் காயத்தில் இருந்த டியராவும், பிளாசி மடிய்டி ஆகியோர் மீண்டிருப்பது அணிக்கு பலமாக கருதப்படுகிறது. மேலும் மார்வின் மார்டின், சமிர் நாஸ்ரி, ஜெரிமி மெனஸ், ஆகியோர் கோல் வேட்டை நடத்துவதில் தேறியவர்கள்.

Story first published: Monday, June 11, 2012, 11:42 [IST]
Other articles published on Jun 11, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+