Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யூரோ கோப்பை: பரமவைரிகளான இங்கிலாந்து- பிரான்ஸ் இடையேயான ஆட்டம் டிரா

டோனெட்ஸ்: நடப்பு 14-வது யூரோ கோப்பை கால்பந்து தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் அணிகள் இடையேயான போட்டி டிராவில் முடிந்தது.

ஆட்டத்தின் 30-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் ஜோலியன் லெஸ்காட் முதல் கோலை அடித்தார். விடுவார்களா பிரான்ஸ் அணி? ஆட்டத்தின் 39-வது நிமிடத்தில் அந்த அணியின் சமிர் நஸ்ரி கோல் அடித்தார். முதல் பாதியின் முடிவில் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்து சமநிலையில் இருந்தனர்.

ஆட்டத்தின் 2-வது பாதியில் இரண்டு அணிகளுமே கோல் அடிக்க முயற்சித்தனர். ஆனால் ஆட்டத்தின் முடிவு வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. பிரான்ஸ்க்கு 11 கார்னர் வாய்ப்புகள் கிடைத்தும் கோலாக மாறவில்லை.

இங்கிலாந்தின் தடுப்பு ஆட்டமும் அபாரமாக இருந்தது. பிரான்ஸ் 19 முறை கோல் அடிக்க முயற்சித்தது. கோலாக மாறிவிடுமோ என்ற 6 முயற்சியை இங்கிலாந்து கோல்கீப்பர் அற்புதமாக தடுத்தாடினார்.

இங்கிலாந்து - பிரான்ஸ் இடையேயான ஆட்டம் 1-1 என்ற சமனில் முடிவடைந்தது.

இங்கிலாந்தும் பிரான்ஸும் இதுவரை 28 முறை மோதியுள்ளன. இதில் இங்கிலாந்து அணி 14 முறை வென்றுள்ளது. பிரான்ஸ் அணி 8 முறை வென்றுள்ளது.

Story first published: Tuesday, June 12, 2012, 8:55 [IST]
Other articles published on Jun 12, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+