உலகக் கோப்பை சாம்பியன் ஸ்பெயின் அணி, சர்வதேச கால்பந்து சம்மேளன தர வரிசைப்
பட்டியலில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை அந்த இடத்தில் இருந்த
பிரேசில் 3வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இந்தியா ஒரு முன்னேறி 132வது இடத்திற்கு உயர்ந்துள்ளது.
சர்வதேச கால்பந்து சம்மேளனமான பிஃபா புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் இதுவரை முதலிடத்தில் இருந்து வந்த பிரேசில் 3வது இடத்திற்குத்
தள்ளப்பட்டு விட்டது. 2வது இடத்தில் இருந்து வந்த ஸ்பெயின் முதலிடத்தைப்
பிடித்துள்ளது. மீண்டும் முதலிடத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
4வது இடத்தில் இருந்து வந்த நெதர்லாந்து 2வது இடத்தையும், 6வது இடத்திலிருந்து
வந்து ஜெர்மனி 4வது இடத்தையும் பிடித்துள்ளன.
*முதல் பத்து இடங்களில் உள்ள அணிகள்...*
1. ஸ்பெயின், 2. நெதர்லாந்து, 3. பிரேசில், 4. ஜெர்மனி, 5. அர்ஜெடினா, 6.
உருகுவே, 7. இங்கிலாந்து, 8. போர்ச்சுகல், 9. எகிப்து, 10. சிலி.
இந்தியா ஒரு படி முன்னேற்றம்
தர வரிசையில் இந்தியாவுக்கும் லேசான சந்தோஷம் உண்டு. இதுவரை 133வது இடத்தில்
இருந்து வந்த இந்தியா ஒரு படி முன்னேறி 132வது இடத்தைப் பிடித்துள்ளது.
தொடர் தோல்விகளைச்சந்தித்தாலும் கூட இந்தியா ஒரு இடம் முன்னேறியுள்ளது
குறிப்பிடத்தக்கது.