Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2017-ல் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை இந்தியாவில் நடத்த மத்திய அரசு ஒப்புதல்!

Government approves India's bid to host U-17 Football World Cup in 2017
டெல்லி: 2017ஆம் ஆண்டு 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியை இந்தியாவில் நடத்த மத்திய அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது.

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், இந்தியாவில் 2017ஆம் ஆண்டு 17வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியை இந்தியாவில் நடத்த அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு கோரியிருந்த யோசனைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்புதல் மூலம் சர்வதேச கால்பந்து கூட்டமைப்புக்கான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து போட்டி ஏற்பாடுகளுக்கும் மத்திய அரசு உத்திரவாதம் அளித்திருக்கிறது. மேலும் கால்பந்தாட்ட மைதானங்களை மேம்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு போதுமான நிதி உதவியை அளிக்கும். கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசிடம் இருந்து போதுமான உத்திரவாதம் கொடுக்கப்படாததால் இந்திய கால்பந்து கூட்டமைப்பின் கோரிக்கையை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு நிராகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, June 13, 2013, 15:18 [IST]
Other articles published on Jun 13, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+