Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

லண்டன் ஒலிம்பிக்: பெண்களுக்கான கால்பந்து லீக் சுற்று இன்று துவக்கம்

London olympics 2012
லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழாவிற்கு இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில், பெண்களுக்கான கால்பந்து லீக் சுற்று போட்டி இன்று நடைபெற உள்ளது.

லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் 27ம் தேதி முதல் துவங்க உள்ளது. இதன் துவக்க விழாவிற்கு இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில், பெண்களுக்கான கால்பந்து அணிகளுக்கான லீக் சுற்று போட்டி இன்று துவங்க உள்ளது.

லண்டன் ஒலிம்பிக் கால்பந்து போட்டியின் துவக்க விழாவில், பிரபல கால்பந்து வீரர் டேவிஸ் பெக்காம் கலந்து கொள்ள உள்ளார். பெண்களுக்கான லீக் சுற்றுப் போட்டியில் இன்று 'இ' பிரிவில் உள்ள இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி கார்டிப் நகரில் உள்ள மில்லேனியம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இதற்காக மைதானத்தை சுற்றிலும் உள்ள சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆண்களுக்கான கால்பந்து லீக் சுற்று போட்டிகள் நாளை துவங்கும். லண்டன் ஒலிம்பிக்கில் நடைபெற உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் கால்பந்து போட்டிகளுக்கு, இந்திய அணி தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, July 25, 2012, 13:33 [IST]
Other articles published on Jul 25, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+