ரியோ டி ஜெனிரோ: பிரேசில் நாட்டு கால்பந்து கிளப்புக்காக மைக்கேல் ஜாக்சன், மகாத்மா காந்தி ஆகியோர் விளையாடுகின்றனர்.
பிரேசில் நாட்டு கால்பந்து கிளப்பில் விளையாடும் வீரர்கள் புனைப் பெயர்களை பயன்படுத்துவது வழக்கம். இந்நிலையில் பிரேசில் கால்பந்து கிளப்பான அட்லெடிகோ கோயியானியன்ஸில் புதிதாக மைக்கேல் ஜாக்சன் சேர்க்கப்பட்டுள்ளார்.
அந்த வீரரின் உண்மையான பெயர் கார்லோஸ் அட்ரியானோ டிசோசா க்ரூஸ். புனைப் பெயர் தான் மைக்கேல் ஜாக்சன். மைக்கேல் ஜாக்சன் ஜான் லென்னன், மகாத்மா காந்தி ஆகியோருடன் ஒரே அணியில் விளையாடவிருக்கிறார்.

பீட்டில்ஸ் இசைக்குழுவைச் சேர்ந்த ஜான் லென்னனின் பெயரில் விளையாடும் வீரரின் நிஜ பெயர் ஜான் லென்னன் சில்வா சான்டோஸ். மகாத்மா காந்தி பெயரில் விளையாடும் வீரரின் நிஜ பெயர் மகாத்மா காந்தி ஹெபர் பியோ.
ஜாக்சன் ஏற்கனவே பிரேசில் கால்பந்து கிளப்புகளான பால்மீராஸ் மற்றும் ப்ளுமினென்ஸ் ஆகியவற்றுக்காக விளையாடி உள்ளார்.