Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கட்டாய வெற்றியை நோக்கியுள்ள நெதர்லாந்து இன்று ஜெர்மனியுடன் மோதுகிறது!

Vanpersie
கார்கிவ்: யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய 2வது போட்டியில் பலமான பி பிரிவை சேர்ந்த ஜெர்மனி, நெதர்லாந்து அணிகள் மோத உள்ளன. இன்றைய போட்டியில் நெதர்லாந்து அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் களமிறங்குகிறது.

ஐரோப்பியா நாடுகளின் கால்பந்து அணிகள் பங்கேற்கும் 14வது யூரோ கோப்பை கால்பந்து தொடர், போலந்து மற்றும் உக்ரைன் நாடுகளில் நடைபெறுகிறது. இதில் இன்று உக்ரைனின் மெட்லிஸ்ட் மைதானத்தில் நடைபெற உள்ள லீக் போட்டியில் ஜெர்மனி, நெதர்லாந்து அணிகள் மோத உள்ளன.

முதல் போட்டியில் டென்மார்க் அணியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்த நெதர்லாந்து இன்று கட்டாய வெற்றிப் பெற வேண்டும் என்ற நிலையில் களமிறங்குகிறது. இன்றைய நெதர்லாந்து தோல்வியடைந்தால், உலக கோப்பை இறுதிப் போட்டியில் பங்கேற்ற நெதர்லாந்து அணி, யூரோ கோப்பையின் லீக் போட்டியுடன் தொடரில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்படும்.

நெதர்லாந்தின் பரிதாப நிலையை மாற்ற அணியில் உள்ள வீரர்கள் இன்று கடுமையாக போராடுவார்கள் என்று தெரிகிறது. அணியில் உள்ள ஸ்னைடர், அர்ஜென் ராபென் போன்ற முக்கிய வீரர்கள் பொறுப்பாக ஆட வேண்டும்.

ஜெர்மனி அணியை பொறுத்தவரை முதல் போட்டியில் போர்ச்சுகலை வீழ்த்தியுள்ளது. இதனால் இன்று வெற்றிப் பெற்றால் ஜெர்மனியின் காலிறுதி வாய்ப்பு அதிகரிக்கும். யூரோ கோப்பை வெல்லும் வாய்ப்பு கொண்ட ஜெர்மனி அணியில் லுகாஸ் பொடோல்ஸ்கி, தாமஸ் முல்லர் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

இதுவரை இரு அணிகளும் 3 முறை மோதி உள்ளன. இதில் ஜெர்மனி 1 முறை வெற்றிப் பெற்றுள்ளது. மற்ற இரு போட்டிகளும் டிராவில் முடிந்துள்ளது. இதனால் இன்று ஜெர்மனிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.

Story first published: Wednesday, June 13, 2012, 12:19 [IST]
Other articles published on Jun 13, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+