Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யூரோ கோப்பை கால்பந்து: சாம்பியன் ஸ்பெயினுக்கு செக் வைக்குமா இத்தாலி?

Euro Cup 2012
ஜிடன்ஸ்க்: யூரோ கோப்பைக்கான கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியனான ஸ்பெயின் அணி சர்ச்சைக்குரிய இத்தாலி அணியை எதிர்கொள்கிறது.

ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டிகள் போலந்து மற்றும் உக்ரைனில் நடக்கிறது. இத்தொடரில் சி பிரிவு லீக் போட்டியில் ஸ்பெயின் மற்றும் இத்தாலி அணிகள் மோதுகின்றன.

நடப்புத் தொடரில் கோப்பை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிற ஸ்பெயின் அணியில் கார்லஸ் புயோல், டேவிட் வில்லா ஆகியோர் இல்லாதிருப்பது பலவீனமானதாக இருந்தாலும் கேப்டன் கேசில்லாஸ், ராமோஸ், பேப்ரிகாஸின் ஆட்டம் கை கொடுக்கலாம். ஸ்பெயின் அணியின் சிறந்த வீரரான பெர்னாண்டோவோதான் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்துவாரா?அல்லது தொடர்ந்தும் சொதப்புவாரா? என்று தெரியவில்லை. தொடர்ச்சியாக வெற்றியை மட்டும் ருசித்து வருகிறது ஸ்பெயின் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தாலி அணியோ சூதாட்ட சிக்கலில் சிறப்பான வீரரான கிறிஸ்சிஸ்டோவை இழந்தது. ஜியூசெப்பி, ஆன்ரியா ஆகியோருக்கும் காயம். இருவரும் பங்கேற்கவில்லை. கடந்த பல போட்டிகளில் தொடர்ந்தும் தோல்வி முகம். இருப்பினும் கேசனோ, பவ்வான், டேனியலி ஆகியோர் இத்தாலி அணியின் நம்பிக்கை பிதாமகன்கள். யூரோ கோப்பை போட்டிகளில் இத்தாலி சொதப்பியே வந்தாலும் ஸ்பெயினுடனான போட்டிகளில் கொஞ்சம் தில் காட்டியே வந்திருக்கிறது. இதனால் இன்றைய போட்டி விறுவிறுப்பாகவே இருக்கக் கூடும்.

மற்றொரு போட்டியில் குரோஷியாவும் அயர்லாந்தும் மோதுகின்றன.

Story first published: Sunday, June 10, 2012, 16:02 [IST]
Other articles published on Jun 10, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+