Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நெக்ஸ்ட் என்ன பாஸ்?.. ரெஸ்ட்டுதான்.. நெய்மார் நெட்பிளிக்ஸோடு செட்டிலானார்.. மலையேறினார் ஹாமில்டன்!

லண்டன்: கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக சர்வதேச அரங்கில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஒரு துறை என்றால் அது விளையாட்டுதான். கால்பந்து, கிரிக்கெட், டென்னிஸ் என எல்லாமே பாதிக்கப்பட்டுள்ளன.

முக்கியப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டு விட்டதால் வீரர்கள், வீராங்கனைகளுக்கு நல்ல ஓய்வு கிடைத்துள்ளது. இதுதான் சாக்கு என்று வீடுகளில் பலர் முடங்கிக் கிடக்கின்றனர். பலர் குடும்பத்தோடு பொழுதை போக்கி வருகின்றனர்.

சரி இந்த வீரர்கள் எல்லாம் என்னதான் செய்கிறார்கள் என்று பார்த்து வரலாமே என்று கிளம்பி ஒரு ரவுண்டு போனோம். பார்த்தால் செம காமெடியாக இருக்கிறது பலரது இந்த ஓய்வு கலாட்டாக்கள்.

குடும்பத்தினருடன் செர்ஜியோ ரமோஸ் ஓய்வு

குடும்பத்தினருடன் செர்ஜியோ ரமோஸ் ஓய்வு

கால்பந்து வீரர் செர்ஜியோ ரமோஸ் தனது வீட்டுக்குள்ளேயே உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளாராம். வெளியில் தலை காட்டுவதில்லை. வெளியில் போனால் சிக்கல் என்பதால் ஜிம்முக்கும் போகாமல் தனது வீட்டுக்குள்ளேயே உடற்பயிற்சி செய்கிறார். கூடவே வீட்டினருடன் நிறைய டைம் ஸ்பெண்ட் செய்கிறாராம். என்னைப் போலவே எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள் என்று டிரட்மில்லில் உடற்பயிற்சி செய்தவாறே கூறுகிறார் செர்ஜியோ. மேலும் மனைவி பிள்ளைகளுடன் இருக்கும் படத்தையும் அவர் போட்டுள்ளார்.

மலையேறி விளையாடும் ஹாமில்டன்

மலையேறி விளையாடும் ஹாமில்டன்

அடுத்து நாம பார்க்கப் போவது லூயிஸ் ஹாமில்டன். பார்முலா 1 ரேஸ் வீரர். இவரது காரையும் கட்டிப் போட்டு விட்டனர்.. அதாவது கால்களையும் கட்டிப் போட்டு விட்டனர். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த ஹாமில்டனுக்கு வந்தது சூப்பர் ஐடியா. மெல்போர்ன் நகரில் உள்ள உள்ளரங்க மலையேற்ற மையத்துக்குப் போய் அதில் ஏறி விளையாடி பொழுதைக் கழித்துள்ளார். இது நல்ல அனுபவமாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

படம் பார்க்கும் பிரேசிலின் நெய்மார்

படம் பார்க்கும் பிரேசிலின் நெய்மார்

பிரேசில் கால்பந்து ஸ்டார் நெய்மாருக்கும் இந்த சமயத்தில் நல்ல ஓய்வு கிடைத்துள்ளதுங்க. போன வாரம் நடந்த ஒரு கால்பந்து போட்டியில் பாரிஸ் செயின்ஜெர்மைன் அணி சார்பில் விளையாடியிருந்தார் நெய்மார். அந்தப் போட்டியில் அவரது அணி வெற்றி பெற்றது. ஆனால் தற்போது எல்லாப் போட்டிகளும் ரத்தாகி விட்டதால் வீட்டோடு இருக்கிறார் நெய்மார். பொழுது போகவில்லை என்பதால் அவர் நெட்பிளிக்ஸில் படமாக பார்த்துத் தள்ளிக் கொண்டிருக்கிறாராம்.

வீட்டுக்குள் குழந்தைகளுடன் விளையாட்டு

வீட்டுக்குள் குழந்தைகளுடன் விளையாட்டு

ஆர்சனல் வீரரான ஸ்கோட்ரன் முஸ்தபி தனது வீட்டில் தனது குழந்தைகளோடு பொழுதைக் கழித்து வருகிறார். சும்மா இல்லைங்க.. கைகளை எப்படிக் கழுவுவது என்பது குறித்தும் அவர்களுக்கு விளக்கம் கொடுத்தபடி குழந்தைகளோடு விளையாடுகிறார். வீட்டுக்குள்ளேயே அப்பாவும் பிள்ளைகளும் கால்பந்து விளையாடி பொழுதைப் போக்கி வருகிறார்களாம்.

பிடிச்ச கொழுக்கட்டை செய்யும் பாலோ

பிடிச்ச கொழுக்கட்டை செய்யும் பாலோ

அதேபோல ஜூவன்டஸ் அணி வீரரான பாலோ டிபாலா தனது வீட்டில் சமையல் செய்து ஜாலியாக பொழுதைப் போக்கி வருகிறார். அர்ஜென்டினாவில் உள்ள தனது வீட்டில் அவர் சமையல் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நம்ம ஊர் பிடிச்ச கொழுக்கட்டை போல எதையோ செய்து அதை காட்டி பேசியுள்ளார் அந்த வீடியோவில். பரவாயில்லையே சமையல் எல்லாம் செய்து வைத்திருக்கிறார் இவர். மனைவி கொடுத்து வைத்தவர்தான்.

Story first published: Sunday, March 15, 2020, 17:31 [IST]
Other articles published on Mar 15, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+