For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

சர்வதேச கால்பந்துப் போட்டியில் தமிழீழ அணிக்கு 3வது இடம்!

ஐஸில் ஆப் மேன்: ஐ.நா சபையால் அங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கான சர்வதேச கால்பந்துப் போட்டித் தொடரில் தமிழீழ அணிக்கு 3வது இடம் கிடைத்துள்ளது.

3வது இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்கான போட்டியில், தமிழீழ அணி ரேஷியா என்ற அணியுடன் மோதி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

நேற்று நடந்த இந்தப் போட்டியை பெரும் திரளானோர் பார்த்து ரசித்தனர். தமிழீழ அணிக்கு எடுத்த எடுப்பிலேயே சர்வதேச போட்டி ஒன்றில் 3வது இடம் கிடைத்திருப்பது தமிழீழ மக்களிடையே மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டின்வேல்ட் மைதானத்தில்

டின்வேல்ட் மைதானத்தில்

டின்வேல்ட் என்ற மைதானத்தில் இந்தத் தொடருக்கான போட்டிகள் நடந்தன. மொத்தம் 6 அணிகள் கலந்து கொண்டன.

இரு பிரிவாக பிரிந்து

இரு பிரிவாக பிரிந்து

அதில் ஏ பிரிவில் 3 அணிகளும், பி பிரிவில் 3 அணிகளும் இடம் பெற்றிருந்தன.

இறுதிப் போட்டியில் ஆசிடேனியா - செயின்ட் ஜான்ஸ்

இறுதிப் போட்டியில் ஆசிடேனியா - செயின்ட் ஜான்ஸ்

இறுதிப் போட்டி இன்று நடக்கிறது. அதில் ஏ பிரிவிலிருந்து ஆசிடேனியா அணியும், பி பிரிவிலிருந்து செயின்ட் ஜான்ஸ் அணியும் மோதுகின்றன.

3வது இடத்தைப் பிடித்த தமிழீழம்

3வது இடத்தைப் பிடித்த தமிழீழம்

ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த தமிழீழ அணி 3வது இடத்துக்கான போட்டியில் ரேஷியாவுடன் மோதியது.

விறுவிறுப்பான போட்டி

விறுவிறுப்பான போட்டி

3வது இடத்துக்கான போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடந்தது. அதில் தமிழீழ அணி அபாரமாக ஆடியது. 5 கோல்கள் போட்ட அந்த அணி, ரேஷிய வீரர்களை ஒரு கோல் கூட போட விடாமல் தடுத்து வெற்றியைப் பெற்றது.

தமிழீழ தேசிய கீதத்துடன்

தமிழீழ தேசிய கீதத்துடன்

தமிழீழ தேசிய கீதத்துடன் போட்டி உற்சாகமாக தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

விக்கெட் கீப்பர் நாகலிங்கம்

விக்கெட் கீப்பர் நாகலிங்கம்

அந்தோனி நாகலிங்கம் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். அணியில், அருண் விக்னேஸ்வராஜா, கதிரவன் உதயணன், சிவரூபன் சத்தியமூர்த்தி,

கெவின் நாகேந்திரா, கஜேந்திரன் பாலமுரளி, ரொன்சன் வல்லிபுரம், மதன்ராஜ் உதயணன், பிரவீன் நல்லதம்பி, ஷாசில் நியாஸ், பனுஷன் குலேந்திரன், பிரஷாந்த் ராகவன், மேனன் நகுலேந்திரன், ஜிவிந்தன் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

ஆர்வத்துடன் கூடிய தமிழர்கள்

ஆர்வத்துடன் கூடிய தமிழர்கள்

போட்டியைக் காண நிறைய தமிழர்கள் வந்திருந்தனர். அதேபோல தமிழீழ ஆதரவாளர்களும் திரளாக கூடியிருந்தனர்.

சிவரூபனின் முதல் கோல்

சிவரூபனின் முதல் கோல்

சிவரூபன் ஆட்டம் தொடங்கிய 3வது நிமிடத்தில் தனது அணிக்கான முதல் கோலை அடித்தார்.

கஜேந்திரன் உதவியுடன் மதன்ராஜ் 2வது கோல்

கஜேந்திரன் உதவியுடன் மதன்ராஜ் 2வது கோல்

அடுத்து கஜேந்திரன் உதவியுடன் மதன்ராஜ் அணிக்கான இரண்டாவது கோலைப் போட்டார்.

ரேஷியாவில் 3 பேருக்கு ரெட் கார்ட்

ரேஷியாவில் 3 பேருக்கு ரெட் கார்ட்

ரேஷிய அணியில் அடுத்தடுத்து 3 பேர் முரட்டு ஆட்டத்தில் ஈடுபட்டதால் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டனர். இதனால் அந்த அணிக்கு பெரும் பலவீனமாகிப் போனது.

2வது பாதியில் 3 கோல்கள்

2வது பாதியில் 3 கோல்கள்

2வது பாதி ஆட்டத்தில் அணியின் மேலும் 3 கோல்களை தமிழீழ வீரர்கள் போட்டனர்.

பாராட்டிய பால் ரீனி

பாராட்டிய பால் ரீனி

இங்கிலாந்து முன்னாள் கால்பந்து வீரர் பால் ரீனியும் போட்டிக்கு வந்திரு்நதார். தமிழீழ அணி வீரர்களை அவர் பாராட்டினார். 3வது இடத்துக்கான பரிசையும் அவரே வழங்கினார்.

தமிழீழ அணியின் வெற்றி குறித்து தமிழ் இளையோர் அமைப்பு பெருமிதம் தெரிவித்துள்ளது.

Story first published: Monday, July 8, 2013, 14:22 [IST]
Other articles published on Jul 8, 2013
English summary
Tamil Eelam football team has snatched third place in an international soccer match held in Isle of Man.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X