Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யூரோ கோப்பை: ரொனால்டோவின் போர்ச்சுகல், பலம் கொண்ட ஜெர்மனியை வீழ்த்துமா?

Euro cup 2012
லிவ்: யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய லீக் போட்டியில் பலம் வாய்ந்த ஜெர்மனி அணியை, போர்ச்சுகல் அணி மோத உள்ளது. இரவு 9.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு போட்டியில் நெதர்லாந்து, டென்மார்க் அணிகள் மோதுகின்றன.

ஐரோப்பிய நாடுகள் மட்டுமே பங்கேற்கும் யூரோ கோப்பை கால்பந்து தொடரை போலந்து மற்றும் உக்ரைன் நாடுகள் நடத்தி வருகின்றன. தொடரின் துவக்க நாளான நேற்று 2 போட்டிகள நடைபெற்றன. இன்றும் 2 போட்டிகள் நடைபெற உள்ளன.

இரவு 9.30 மணிக்கு நடைபெற உள்ள முதல் போட்டியில் நெதர்லாந்து, டென்மார்க் அணிகள் மோத உள்ளன. அதன்பிறகு 12.15 மணிக்கு நடைபெற உள்ள 2வது போட்டியில் பலம் கொண்ட ஜெர்மனியும், போர்ச்சுகலும் மோத உள்ளன.

ஜெர்மனி அணியில் ஸ்கீவன்ஸ்டீர், போயட்டங், பிலிப் லாமின் ஆகிய முக்கிய வீரர்கள் உள்ளனர். ஆனால் போர்ச்சுகல் அணியில் நம்பிக்கை நட்சத்திரமாக கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீது தான் ரசிகர்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். காலிறுதிக்கு முன்னேற ஒவ்வொரு லீக் போட்டியின் வெற்றியும் முக்கியம் என்பதால், இன்று 2 அணிகளும் முழு பலத்துடன் களமிறங்கும் என்று தெரிகிறது.

யூரோ கோப்பை தொடரில் 3 முறை சாம்பியனான ஜெர்மனி கடந்த 16 ஆண்டுகளாக கோப்பை வெல்லாத முடியாமல் தவித்து வருகிறது. இதனால் துவக்கம் முதலே வெற்றியுடன் துவக்க ஜெர்மனி காத்திருக்கிறது.

Story first published: Saturday, June 9, 2012, 16:27 [IST]
Other articles published on Jun 9, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+